மதுரை: தமிழ் திரைப்பட நடிகர் தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் மறைவு பலருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடல்நலக் கோளாறு காரணமாக மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த Actor Thavasi புகைப்படம் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு இணயத்தில் வைரலானது. அந்த புகைப்படத்தை பார்த்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த புகைப்படத்தில் அவர் ஆள் அடையாளமே தெரியாத வகையில் மிகவும் மெலிந்து, பார்ப்பவர்களின் மனதில் அய்யோ இப்படி ஆகிவிட்டாரே என்ற கவலையை ஏற்படுத்தியது.
அவரது மறைவை அடுத்து பலர் அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அவரது "ஆத்மா சாந்தியடையட்டும்" எனப் பதிவிட்டு வருகின்றனர்.
அவரது மறைவைக் குறித்து திமுக (DMK) எம்எல்ஏ சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில், "குணச்சித்திர நடிகர் திரு.தவசி அவர்கள் உணவுக் குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 11.11.2020 அன்று (மிகவும் முற்றிய நிலையில்) எங்களது சரவணா மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உணவுக்குழாயில் Oesophageal Stent பொருத்தியிருந்தோம்.
ALSO READ | யார் இந்த காமெடி நடிகர் தவசி? அவரது உடல் நிலைக்கு என்னாச்சி?
தனி அறையில் சிகிச்சை பெற்று வந்த திரு.தவசி அவர்களுக்கு இன்று (23.11.20)அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்ட காரணத்தினால் அவரச சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். இரவு 08:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
வந்த திரு.தவசி அவர்களுக்கு இன்று (23.11.20)அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்ட காரணத்தினால் அவரச சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். இரவு 08:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உறவினர்கள்,நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். #RIP
— Dr.P.Saravanan MD.,MLA (@mdr_saravanan) November 23, 2020
சிவகார்த்திகேயன், சூரி நடிப்பில் பொன்ராம் இயக்கிய "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" என்ற படத்தில் பஞ்சாயத்து காட்சியில் கம்பீரமாக இரண்டு பக்க வசனத்தை ஒரே டேக்கில் பேசிய நடிகர் தவசி, பல படங்களில் கிராமத்து கோவில்களின் பூசாரி ஆகவும் "கருப்பன் குசும்புக்காரன்" என்னும் வசனத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR