ஜம்மு-காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் சுரேஷ் உடல் தருமபுரியில் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் நேற்று பாக்கிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் சுரேஷ் என்பவர் வீரமரணம் அடைந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் வீர மரணமடைந்த தமிழக வீரர் சுரேஷின் உடல் இன்று காலை கோவை விமானநிலையம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து இருந்து சொந்த ஊரான தருமபுரி மாவட்டம் பண்டார செட்டிப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது.
பண்டாரசெட்டிப்பட்டியில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இறுதிச்சடங்குகளும் செய்யப்பட்டன. பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் அத்துமீறலுக்கு எல்லைப்பகுதி முழுவதும் இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் எல்லையில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
#Visuals from Dharmapuri (Tamil Nadu): Last rites of BSF jawan A Suresh who lost his life in ceasefire violation in J&K's RS Pura pic.twitter.com/GsDwzhhS24
— ANI (@ANI) January 19, 2018