காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்க வாய்ப்பில்லை: சுப்ரமணியன் சுவாமி

தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது என்று பாஜக எம்.பி சுப்ரமணியன் சுவாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Last Updated : Feb 5, 2018, 08:11 AM IST
காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்க வாய்ப்பில்லை: சுப்ரமணியன் சுவாமி title=

காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று பா.ஜ.க எம்.பி சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு தண்ணீர் வேண்டுமா? காவிரி நீர் வேண்டுமா?. தமிழகத்திற்கு காவிரி நீர் தான் வேண்டுமென்றால் அது கிடைக்காது. அந்த விவகாரத்தில் அனைவரும் நாடகமாடுகிறார்கள். 

தமிழகத்திற்கு தண்ணீர் வேண்டுமென்றால் கடல்நீரை உப்பு நீக்கி பயன்படுத்தலாம். விவசாயிகளுக்கும் அதன்மூலம் எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் கொடுக்க முடியும். இதுதொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்-க்கு சந்தேகம் என்றால் அவர்கள் என்னிடம் கேட்கட்டும். நான் கடல்நீரை சுத்தகரிக்கும் 4 இயந்திரங்களை கடற்கரையில் வைக்கிறேன். அதன்மூலம் தண்ணீர் கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Trending News