திருச்சி: ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரக்கூடாது என பிரபல பரத நாட்டிய கலைஞர் ஜாஹிர் ஹீசைன் வெளியேற்றப்பட்ட விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது, ஜாஹிர் ஹுசனை கோவிலை விட்டு வெளியேற கூறிய ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மீது கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பிரபல பரத நாட்டிய கலைஞரான ஜாஹிர் ஹூசைன் கடந்த 10 ஆம் தேதி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு (Srirangam Ranganathar Temple) சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அவர் முஸ்லிம் என்பதால் அவரை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்.
கோவிலில் இருந்த ஜாஹிர் ஹீசைனை ஆலயத்தில் இருந்து வெளியே விட்டு, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்த சம்பவத்தால் மனவேதனை அடைந்ததால், ரத்து கொதிப்பு அதிகமானதாகவும் ஜாஹிர் ஹூசைன் தெரிவித்திருந்தார்.
ரத்த கொதிப்புடன், மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் கூறிய ஜாஹிர் ஹூசைன் சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் (Government Hospital) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கோவில் இணை ஆணையர் மாரிமுத்து விசாரணை மேற்கொண்டார்.
இந்து மதத்தின் மீதும், வைணைவ சமயத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கும் ஜாஹிர் ஹீசைன் பல முறை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்துள்ளார். ஆனால் தற்போது திடீரென ரங்கராஜன் நரசிம்மன் அவரை துரத்தி அடித்து, மத துவேசமும் செய்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Deeply disturbed about the ill treatment of dancer Zakir Hussain when he went to have darshanam of Ranganatha at Srirangam. Action needs to be taken against the person. Let's not forget, Srirangam is an example of syncretic bhakti with a special place given to Thuluka Nacchiar.
— T M Krishna (@tmkrishna) December 11, 2021
அதுதவிர, ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் கோவில் குறித்து பல பொய் செய்திகளை பரப்பி வருகிறார். தற்போது மத வேற்றுமையை தூண்டும் வகையில் செயல்பட்டுள்ளார் என்றும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து சார்பில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரங்கராஜன் மீது ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகார்களும் இந்த மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்து கோயில்கள் தொடர்பான பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருபவர் ரங்கராஜன் நரசிம்மன்.
இந்து அறநிலையத்துறையிடமிருந்து கோயில்களை மீட்க வேண்டும் என்றும் கோரும் இவர், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்தையும் கடுமையாக எதிர்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read | பிரசாதமே சாபமாகும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR