சென்னை: சீனாவில் இருந்து உலகிற்கு பரவிய கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், கொரோனா பற்றி சமூக ஊடகங்களில் வதந்திகள் உட்பட பல வகையான செய்திகள் பகிரப்படுகிறது. அதன் உண்மை தன்மை அறியாமல் யாரும் பகிர வேண்டாம். அந்த செய்தி உண்மை தானா? என்றும் அறிந்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவைத் தடுக்க WHO தனது பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவுவதற்கான தடுப்பு, அறிகுறிகள் மற்றும் நடவடிக்கைகள் போன்ற முக்கியமான விஷயங்களைப் பற்றிய தகவல்களை உலக சுகாதார நிறுவனம் அளித்து வருகிறது.
அதேபோல இந்தியாவிலும் மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மத்திய சுகாதாரத்துறை, மாநில அரசுகளுடன் இணைந்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நாட்டில் உள்ள பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரி, திரை அரங்கம், ஷாப்பிங் மால், விளையாட்டு அரங்கம் உட்பட பல பகுதிகளுக்கு தடை விதித்துள்ளது. மக்கள் அதிக அளவில் கூட வேண்டாம் என்றும், அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கி வருகிறது.
வெளிநாட்டுக்கு செல்லும் பல விமானங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள், பூங்காக்கள் போன்ற பகுதிகளில் பலத்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல கோயில்கள் மூடப்பட்டன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பலர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.
இந்தநிலையில், கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிபை வெளியிட்டுள்ளது. அது வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மற்றும் திருப்பதி இடையே இயக்கப்படும் ரயில்கள் இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் மதுரை, திருவனந்தபுரம், எர்ணாகுளம், செகந்திராபாத் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், அதுமட்டுமில்லாமல் குறிப்பிடப்பட்ட அளவில் முன்பதிவு செய்யாத 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
முழுவிவரம்: