சிறந்த பள்ளிகளுக்கு ‘காமராஜர் விருது’ : அமைச்சர் செங்கோட்டையன்

Last Updated : Jul 5, 2017, 02:30 PM IST
சிறந்த பள்ளிகளுக்கு ‘காமராஜர் விருது’ : அமைச்சர் செங்கோட்டையன் title=

இன்று தமிழக சட்டப்பேரவையில் ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை கேள்வி எழுப்பினார். அதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:- 

காமராஜர் வாழ்க்கை வரலாறு குறித்து பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அதைக்குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளை தேர்வு செய்து பெருந்தலைவர் காமராஜர் பெயரில் விருது வழங்கப்படும் என்று காமராஜர் பற்றிய ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரையின் கேள்விக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் தெரிவித்தார்.

காமராஜரின் பிறந்தநாள் வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News