குஷ்புவின் ஆவேச பேட்டி... உடனே திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அதிரடி நீக்கம்!

Kushbu Press Meet: என்னை சீண்டி பாக்கதீங்க தாங்க மாட்டீங்க, முதல்வர் ஸ்டாலின் அவர்களே நான் மன்னிப்பேன், ஆனால் மறக்க மாட்டேன் என குஷ்பு ஆவேசமாக தெரிவித்தார். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 18, 2023, 06:17 PM IST
  • பெண்களின் பாதுகாப்பு உறுதி இல்லாமல் இருப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி - குஷ்பு.
  • பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்.
  • சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நீக்கியதற்கு ஸ்டாலினுக்கு நன்றி - குஷ்பு.
குஷ்புவின் ஆவேச பேட்டி... உடனே திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அதிரடி நீக்கம்! title=

Kushbu Press Meet: திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தன்னை பற்றி பேசியது தொடர்பாக சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். 

இதுதான் திராவிட மாடலா?

அப்போது பேசிய அவர்,"பொது மேடையில் மகளிர் பற்றி பேசியதால் இதற்கு முன்னதாக திமுக பேச்சாளர் தற்காலிக நீக்கம் செய்தும் கட்சியில் மீண்டும் காலில் விழுந்து இணைந்தார். பெண்களின் பாதுகாப்பு உறுதி இல்லாமல் இருப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. பெண்களை பற்றி தரைகுறைவாக பேச யாருக்கும் உரிமை கிடையாது.

திமுக தீனிப்போட்டு வளர்கிறது

தனிப்பட்ட பிரச்சனையில் நான் பேசவில்லை. அனைத்து பெண்களுக்கும் தான் பேசுகிறேன். செந்தில் பாலாஜி நம்மை மாட்டிவிட்டுவிடுவாரோ என்ற பயத்தில் தான் தற்போது பெண்களை பற்றி பேசுகிறார். திமுகாவில் பேச்சாளர்களை தீனி போட்டு வளக்கிறார்கள். தேசிய மகளிர் ஆணை உறுப்பினராக சொல்கிறேன். திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது தேசிய மகளிர் ஆணையத்தின் சார்பில் புகார் கொடுக்க உள்ளோம்.

மேலும் படிக்க | எத்தனை சூடுபட்டாலும் திருந்தாத ஜென்மம் ஆளுநர் ஆர்.என்.ரவி - முரசொலி கடும் விமர்சனம்

'மறைமுகமாக ரசிக்கும் ஸ்டாலின்'

குஷ்புவை சீண்டி பார்க்காதீர்கள்... குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகத்தினருக்கு... என்னால் செருப்பால் அடிக்க முடியும், ஆனால் அடிக்க மாட்டேன் அது செருப்புக்கு தான் கேவலம். திமுக கட்சியில் உள்ளவர்கள் பெண்களை பற்றி இழிவாக பேசிவதை ரசிக்கிறார், முதலமைச்சர் முக ஸ்டாலின். எந்த ஆணுக்கும் பெண்களை பற்றி இழிவாக பேச உரிமையில்லை. குறிப்பாக கணவனுக்கே இல்லாத உரிமை பொதுவெளியில் பேசுபவர்களுக்கு எப்படி உரிமை வந்தது.

கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இதுதான் வித்தியாசம்...

யாரை நம்பியும் தமிழகத்திற்கு நான் வரவில்லை. என் திறமையை நம்பி தான் வந்துள்ளேன். கருணாநிதி ஆட்சியில் உள்ள திமுகவிற்கு தற்போது மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுகவிற்கும் இது தான் வித்தியாசம். நான் இன்று இப்படி பேசவில்லை என்றால் என் மகளுக்கு நான் எப்படி முன் உதாரணமாக இருப்பேன். என் அம்மா எனக்கு பால் மட்டும் கொடுக்கவில்லை, தைரியம் கொடுத்து வளர்தது இருக்கிறார்கள். பேசுவதற்கு எப்படி தைரியம் வந்தது, அவன் ஒரு தாய்க்கு பிறந்தவன் தானே" என ஆவேசப்பட்டு பேசினார். குஷ்புவின் கருத்துக்கு பலரும் வரவேற்பும், விமர்சனத்தையும் முன்வைத்தனர். 

நிரந்தர நீக்கம்

குஷ்புவின் செய்தியாளர் சந்திப்புக்கு பின் சிறிது நேரத்திலேயே பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில்,"சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவரை அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்" என குறிப்பிட்டுள்ளார்.  

குஷ்பு நன்றி

தன்னை அவதூறாக பேசியதாக குஷ்பு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த நிலையில், திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கியதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு குஷ்பு நன்றி தெரிவித்தார்.

மேலும் படிக்க | நடிகரின் கால்களை உடைத்த பாஜக நிர்வாகிகள்... மோடிக்கு எதிராக கருத்துதான் காரணமா - பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News