சென்னையில் பள்ளி மாணவியை கடத்த சிலர் முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருந்த மாணவியை ஆட்டோவில் இருந்தே கடத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தப்பிக்க நினைத்த மாணவி கீழே குதித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம் குறித்து தற்போது போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வடசென்னை கிராஸ்ரோடூ சாலை பகுதியை சார்ந்த மாணவி தண்டையார் பேட்டையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார். மாணவி வழக்கம் போல் இன்று பள்ளி செல்ல ஷேர் ஆ்டோவில் ஏறியுள்ளார். அந்த ஆட்டோவில் ஏற்களனவே 25 வயது மதிக்கதக்க இரு நபர்கள் டோல்கெட் இல் இருந்து தங்கசாலை செல்வதற்காக பயனித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
புதுவண்ணாரப்பேட்டையை ஆட்டோ நெருங்கியபோது மாணவியை அவர்கள் கைகுட்டை வைத்து வாயில் அடைக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், எப்படியாவது தப்பிக்க வேண்டும் என நினைத்த மாணவி ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார்.
மேலும் படிக்க | போதை பொருளை தடுக்க முதல்வர் வேண்டுகோள் - இது ஞாயமா என சீமான் கேள்வி?
இதில் மாணவியின் மூக்கு தாடை போன்ற பகுதிகளில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக ஆட்டோவை நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர் மாணவியை தூக்க முற்பட்ட நேரத்தில் மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். உடனடியாக அங்கு கூடியிரூந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர், இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலிசார் மாணவியை முதலுதவி சிகிச்சைக்காக மருத்தவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மாணவிக்கு தேவைப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை அடுத்து தற்போது அந்த மாணவியிடமும் ஆட்டோ ஓட்டுநரான சார்லஸிடமும் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓடும் ஷேர் ஆட்டோவில் இருந்து மாணவி குதித்து கடத்தல் சம்பவத்தில் இருந்து தப்பித்த இச்சம்பவம் புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான இப்படிப்பட்ட சம்பவங்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் அதிகமாகி வருகின்றன. அதுவும் பள்ளி மாணவிகள் குறிப்பாக அதிக அளவில் இலக்காக்கப்படுகிறார்கள். இந்த சமபவத்தில் இந்த பள்ளி மாணவி காட்டிய துணிச்சல் பாராட்டப்பட வேண்டியது. பெண் குழந்தைகள் துணிச்சலுடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது.
மேலும் படிக்க | பாஜக உறுப்பினர் அட்டையில் தமிழிசை கையெழுத்து... அப்போ அண்ணாமலை நிலைமை?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ