கொளத்தூரில் சீமான் தலைமையில் இளநீர் குடிக்கும் திருவிழா!!

Last Updated : Mar 23, 2017, 05:06 PM IST
கொளத்தூரில் சீமான் தலைமையில் இளநீர் குடிக்கும் திருவிழா!! title=

சீமான் தலைமையில் நாம் தமிழர் மாணவர் பாசறை முன்னெடுத்த இளநீர் குடிக்கும் திருவிழா கொளத்தூரில் இன்று நடைபெற்றது.

‘அந்நியக் குளிர்பானங்களைப் புறக்கணிப்போம்! இயற்கைப் பானங்களைப் பருகிடுவோம்!’ எனும் முழக்கத்தை முன்வைத்து நுங்கு, இளநீர், பதநீர், கூழ் போன்ற இயற்கைப் பானங்களைப் அருந்துவதை ஊக்கப்படுத்தும்விதமாகவும், இயற்கைப் பானங்களை அருந்துவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும்விதமாகவும் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை முன்னெடுக்கும் ‘இளநீர் குடிக்கும் திருவிழா’ இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில், சென்னை, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம். காலனியில் பறையிசையுடன் நடைபெற்றது 

இந்நிகழ்வில் பங்கேற்ற 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் இளநீர் வழங்கப்பட்டது, இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று நிகழ்வைத் தொடங்கி வைத்து கருத்துரை வழங்கினார்.

வீடியோ பார்க்க:-

Trending News