ராஜராஜ சோழன் காலத்தில் இந்தியாவே இல்லை இதுல எங்க இந்து... சீமான் அதிரடி பேச்சு

ராஜராஜ சோழன் காலத்தில் இந்தியாவே இல்லை இதுல எங்க இந்து... சீமான் அதிரடி பேச்சு

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 15, 2022, 03:18 PM IST
  • ராஜராஜ சோழன் காலத்தில் இந்தியாவே இல்லை
  • இளையராஜா எம்.பி பதவியை உதறியிருக்க வேண்டும்
  • அண்ணாமலை விரைவில் விரட்டப்படுவார் என சீமான் பேச்சு
 ராஜராஜ சோழன் காலத்தில் இந்தியாவே இல்லை இதுல எங்க இந்து... சீமான் அதிரடி பேச்சு title=

குடிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கொட்டும் மழையில் சீமான் கட்சியினரோடு அமர்ந்திருந்தார். இதனையடுத்து பேசிய அவர், “குடிவாரி கணக்கெடுப்பு தான் சாதி ஒழிப்பிற்கான முயற்சி.குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் சமூக நீதி குறித்து பேசக்கூடாது, தமிழக அரசு குடிவாரி கணக்கெடுத்து கல்வி, வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும்.

நாடு முன்னேறுகிறது என மோடி பேசும் பொய்யைவிட திமுகவினர் பேசும் சமூகநீதி என்பது பெரிய பொய், ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என கூறும் அண்ணாமலை, மோடி 8 ஆண்டாக எதுவும் செய்யவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஈடு இணையற்ற இசைஞானி இளையராஜா தலித் என்பதற்காக அவருக்கு எம்பி பதவி கொடுத்துள்ளனர். இதனை இளையராஜா தூக்கி எறிந்திருக்க வேண்டும்.

 

ராஜராஜ சோழன் காலத்தில் இந்தியாவும் இல்லை; இந்து மதமும் இல்லை. வரலாற்றில் ராஜராஜ சோழன் சைவ மரபினர் என்றே உள்ளது, வீர சைவரான எங்களை ஏன் இந்து என மதம் மாற்றுகிறீர்கள்? மத்திய அரசு நீட்தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்துவிட்டது. அவரவர் தாய் மொழியில் பேசுகின்றனர்; நாம் மொழிகளுக்கே தாயான தமிழ் மொழியில் பேசுகிறோம். இந்த நாட்டு இளைஞர்களை போதை மாத்திரைகளுக்கும், மதுபோதைக்கும் அடிமையாக வைத்துவிட்டனர்.

மேலும் படிக்க | மாணவர்களின் கண்களில் என்றும் கலையாத கனவை வித்திட்ட கலாம்: அவர் வழி நடக்கலாம்!!

அவசரப்பட்டு ஐபிஎஸ் வேலையை விட்டுட்டு வந்துவிட்டார் அண்ணாமலை. இரண்டு வருடங்களில் அண்ணாமலையை பாஜகவினர் விரட்டிவிடுவார்கள் அண்ணாமலையிடம் தயவுசெய்து கேட்கிறேன் ஹெச்.ராஜாவிற்கு ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவி வாங்கி குடுத்துருங்க. காரைக்குடியில் ஒரு ஆளுநர் என இட ஒதுக்கீடு வழங்க ஹெச் ராஜாவிற்கு நான் சிபாரிசு செய்கிறேன்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News