அன்புமணி ராமதாஸ் தாடி வளர்க்க காரணம் என்ன தெரியுமா?

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமனி ராமதாஸ் தாடியுடன் வலம் வரும் காரசணம் வெளியாகியுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 4, 2018, 05:03 PM IST
அன்புமணி ராமதாஸ் தாடி வளர்க்க காரணம் என்ன தெரியுமா? title=

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமனி ராமதாஸ் தாடியுடன் வலம் வரும் காரசணம் வெளியாகியுள்ளது!

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமனி ராமதாஸ் சமீப காலமாக முகத்தில் தாடியுடன் வளம் வருகின்றார். இவரது தாடி குறித்து பல வதந்திகள் வரும் நிலையில் தற்போது அதற்கான ரகசியம் என்ன என்பது வெளியாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவலின்படி... அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகள் கருவுற்று இருப்பதாகவும், அவர் நலமுடன் குழந்தைப்பெற குல தெய்வத்திடமு வேண்டி தாடி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

எப்போதும் மிஸ்டர் க்ளீனாக வலம் வருபவர் அன்புமணி. கடந்த 16-ஆம் தேதி மறைந்த முன்னாள் பாமக MLA  ஜெ.குரு சிலை திறப்பு விழாவில் அன்புமணி ராமதாஸ் தாடியுடன் காணப்பட்டார்.

அதன் பிறகு நடைப்பெற்ற பொதுநிகழ்ச்சிகளிலும் அவர் தாடியோடு காட்சியளித்தார். இந்நிலையில் இவரது தாடி ரகசியம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் தற்போது ராமதாஸ் அவர்களின் மருமகன் டாக்டர். பிரிதிவனும் தாடி வளர்த்து வருகிறார் என தகவல்கள் வெளயாக., அன்புமணி ராமதாஸ் அவர்கள் தாத்தா-வாக பதவி உயர்வு பெறப்போகிறார் என தற்போது தகவல்கள் பரவி வருகின்றது. மேலும் இதற்காக தான் அவர் தாடி வளர்த்து வருகின்றார் எனவும் தகவல்கள் பரவி வருகின்றது.

Trending News