Tamil Nadu: 3 கோடி ரூபாய் மதிப்பிலான கடலட்டை கடத்தல் தடுப்பு

இந்திய கடலோர காவல் படையினர் ரூ .3 கோடி மதிப்புள்ள 300 கிலோ கடல் வெள்ளரிக்காயை பறிமுதல் செய்தனர்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 20, 2021, 03:53 PM IST
  • கடலட்டை கடத்தல் தடுப்பு
  • கடலோர காவல்படையினர் கடலட்டைகளை பறிமுதல் செய்தனர்
  • 3 கோடி ரூபாய் மதிப்பிலான கடல் வெள்ளரி கடத்தல் தடுக்கப்பட்டது
Tamil Nadu: 3 கோடி ரூபாய் மதிப்பிலான கடலட்டை கடத்தல் தடுப்பு   title=

சென்னை: கடலட்டைகளை கடத்த முயன்றவர்களை பிடித்த இந்திய கடலோர காவல்படை குழு, அவர்களிடம் இருந்து 600 கிலோ கடல் வெள்ளரி எனப்படும் கடல் அட்டைகளைக் கைப்பற்றியது. கடலட்டைகள் கடல் சுற்றுச்சூழலின் ஒரு முக்கிய அங்கமாகும், ஏனெனில் அவை சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்தியாவில், 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் (Wildlife Protection Act of 1972) அட்டவணை 1 ன் கீழ் பட்டியலிடப்பட்ட அரிய உயிரினம் என கடலட்டைகள் வகைப்படுத்தப் பட்டுள்ளன.

கடலட்டை‎ அல்லது கடல் வெள்ளரி (Sea cucumber) என்பது கடல்வாழ் உயிரினம் ஆகும். கடலின் அடி ஆழத்தில் வாழும் கடலட்டைகள், நீண்ட உருளை வடிவில் வெள்ளரி போன்று தோற்றமளிப்பதால் கடல் வெள்ளரி என்றும் அழைக்கப்படுகிறது.

கடலட்டைகள் கடத்தப்படுவதாக இந்திய கடலோர காவல்படைக்கு ரகசிய துப்பு ஒன்றின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள ஐசிஜி (Indian Coast Guard team) குழு, சந்தேகத்திற்கிடமான படகை சுற்றி வளைத்தது. 

Also Read | காதலன் ஏற்காததால்; கணவன், குழந்தைகளை விட்டு வந்த பெண் தற்கொலை

அதையடுத்து, ராமநாதபுரம் உச்சிப்பள்ளியில் படகு கொண்டு வரப்பட்டது. படகில் தேடுதல் வேட்டை 600 கிலோ எடையுள்ள 31 வெள்ளைப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளும், படகும் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட கடல் வெள்ளரிக்காயின் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் ஆகும்.

கடல் அட்டைகள், கனிம நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸை வெளியேற்றுவதன் மூலம், கடலின் அடித்தளத்தின் தரையில் வாழும் பெந்திக் விலங்குகளின் (benthic animals) உற்பத்தித்திறனை அதிகரிக்கின்றன. கடல் அட்டைகள் செரிமானம் செய்து வெளியிடும் பொருட்களில் கால்சியம் கார்பனேட்டும் ஒன்று.

பவளப்பாறைகளின் வளர்ச்சிக்கு முக்கியமானது கால்சியம் கார்பனேட் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பவளப் பாறைகளின் வளர்ச்சிக்கு கடல் வெள்ளரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடல் வெள்ளரிகள் கழிவுநீரை உண்டு, கடல் நீரின் சுத்தீகரிப்புக்கும் உதவுகின்றன. 

கடல் வெள்ளரிக்காயின் மற்றுமொரு முக்கிய பங்கு, கடல் அமிலமயமாக்கலை எதிப்பதாகும். ஆனால் அருகி வரும் உயிரினமான கடலட்டை சட்டவிரோதமாக கடத்தப்படுவது கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வுக்கும், கடலுக்கும் தீங்கு விளைவிப்பதாகும்.

READ ALSO | வடகிழக்கு பருவமழை அக்டோபர் 26ம் தேதி தொடங்கலாம்: வானிலை ஆய்வு மையம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News