பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற தமிழகத்தில் இருந்து 66 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.
ஜனவரி 16-ஆம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை அனைத்து வகை பள்ளிகளிலும் படிக்கும் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தவறாமல் பார்க்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
எனவே, அன்றைய தினம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அரசு விடுமுறை ரத்து செய்யப்படுமோ என்ற சந்தேகம் எழுந்த நிலையில் தற்போது இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, பொங்கலுக்கு மறுநாளான ஜனவரி 16-ஆம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என எந்த உத்தரவும் இல்லை என்று அவர் கூறினார்.
பொங்கலுக்கு மறுநாள் விடுமுறையின் போது மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டியது கட்டாயமில்லை. பிரதமர் மோடியின் பேச்சை மாணவர்கள் வீட்டில் இருந்தே கேட்டுக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
"பொங்கலுக்கு மறுநாள் விடுமுறையின் போது மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்; விடுமுறை ரத்து" என்பது தவறான தகவல்.
பொங்கல் விடுமுறையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. #TNEducation #Pongal
— K.A Sengottaiyan (@KASengottaiyan) December 28, 2019
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.