அரியலூர் பிளஸ் 2 வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மதமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும், உண்மையான குற்றவாளியை கைது செய்ய வேண்டும், மதமாற்றம் செய்ய முயலும் அந்த பள்ளியை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ஒருகோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவின் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் எச். ராஜா (H Raja) உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜா, 'தமிழக அரசின் மீது நம்பிக்கை இல்லாததால், சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். அந்த பள்ளியை இழுத்து மூடவேண்டும். உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ஒருகோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்டதால் உடலை பெற்றுக் கொள்கிறோம்' என்று கூறினார்.
மேலும், 'மணப்பாறையில் தந்தை தோண்டிய குழியில், சிறுவன் விழுந்து உயிரிழந்த போது திமுக தலைவர் ஸ்டாலின் (MK Stalin), கனிமொழி உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்தனர். மேலும் கட்சி சார்பாக நிதி வழங்கினார். ஆனால் ஏன் இந்த மாணவி உயிரிழப்புக்கு அவர்கள் வரவில்லை?' என கேள்வி எழுப்பியுள்ளார்.
ALSO READ | Forced Conversion: பள்ளியில் கட்டாய மத மாற்றம்; பள்ளி சிறுமி தற்கொலை..!!
பின்னர் பாஜக-வினர் மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக மனு அளித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட கருப்பு முருகானந்தம், ராஜா உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தது.
முன்னதாக, தஞ்சாவூர் அருகே திருக்காட்டுப்பள்ளி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த எம்.லாவண்யா என்ற 17 வயது சிறுமி, தொடர்ந்து பள்ளியில் படிக்க வேண்டும் என்றால், கிறிஸ்துவ மதத்திற்கு மாறுமாறு பள்ளிக்கூடம் தொடர்ந்து வறுபுறுத்தி சித்ரவதை செய்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ | திமுகவின் செய்தித் தொடர்பாளர்களா IAS, IPS அதிகாரிகள்? எச்சரிக்கும் ஹெச்.ராஜா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR