2 கோடி கிப்ட் வழக்கு: ஜெ., அவுட், செங்கோட்டையன் இன்?

Last Updated : Mar 6, 2017, 01:12 PM IST
2 கோடி கிப்ட் வழக்கு: ஜெ., அவுட், செங்கோட்டையன் இன்? title=

2 கோடி ரூபாய் பரிசுப் பொருள்கள் வழக்கில் இருந்து ஜெயலலிதா, அழகு திருநாவுக்கரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேரும் இறந்துவிட்டதால், வழக்கில் இருந்து விடுவித்துள்ளதாக அறிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்,  கோடை விடுமுறைக்குப் பின், செங்கோட்டையன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெறும் என்று கூறியுள்ளது.

1992-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, முறைகேடாக 2 கோடி ரூபாய் பரிசுப்பொருள்கள் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், தற்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அழகுதிருநாவுக்கரசு ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா, அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மறைந்துவிட்டதால் வழக்கில் இருந்து அவர்களை விடுவிப்பதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

மேலும் கோடை விடுமுறைக்குப் பின், செங்கோட்டையன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெறும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

Trending News