நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்றுவரும் முன்னாள் நீதிபதி கர்ணனின் ஜாமீன் அல்லது பரேல் வழங்கக்கோரிய மனுவை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்.
நீதிபதி கர்ணன் தமிழகத்தைச் சேர்ந்த கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாகப் பதவி வகித்துவந்தார். சில மாதங்களுக்கு முன்னர், தன் சக நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்திருந்தார்.
இதையொட்டி, சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இறுதியாக, நீதிபதி கர்ணன் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கே தண்டனை விதித்த கர்ணன் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது, உடல்நலக் குறைவால் சிகிச்சைபெற்றுவரும் கர்ணன், தனக்களிக்கப்பட்ட தண்டனையில் குறைபாடுகள் உள்ளதென்றும், அவற்றை நிவர்த்திசெய்யும் வரை தனக்கு பரோல் அல்லது ஜாமீன் வழங்க வேண்டுமெனவும் கொல்கத்தா ஆளுநரிடமும் நீதிமன்றத்திடமும் கோரிக்கை மனு அளித்தார்.
இந்த மணிவை மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட் தண்டனையை முழுவதுமாக அனுபவித்தே ஆக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.