சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் தனக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள்தான் ரோஜா. ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் ரோஜா வீட்டு அருகே உள்ள தனது சித்தி வீட்டு அடிக்கடி வந்து சென்ற இளைஞர்தான் சாமிதுரை. ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான சாமிதுரை சென்னையில் கல்லூரி படித்து வருகிறார். சித்தி வீட்டுக்கு வரும் போது ரோஜாவை சந்தித்திருக்கிறார்.ஒரு தலையாக காதல் மலர்ந்தது.
காதலியிடம் காதலை சொல்ல ரோஜா, சாமிதுரை நிராகரித்திருக்கிறார். ஆரம்பத்தில் எல்லாம் அப்படிதான் இருக்கும் போக போக எல்லாம் கைகூடி விடும் என நினைத்த சாமிதுரை, ரோஜாவுக்கு அடிக்கடி காதல் அம்பு விட்டிருக்கிறார். ஆனால் ரோஜா, தனது படிப்பிலும் நடத்தையிலும் கண்ணியமாய் இருந்தார். அதனால் சாமிதுரையை அவர் அரவே ஒதுக்கியிருக்கிறார். அது சாமிதுரையின் காதலை, கொலையாய் மாற்றி போட்டது. அன்பாக கெஞ்சிய இளைஞர் ஆக்ரோஷமாக வலுகட்டாயப்படுத்த ஆரம்பித்திருக்கிறார். அது ரோஜாவுக்கு இன்னும் எரிச்சலை கொடுத்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் தொடர்பை துண்டிக்க தந்தையின் பாதுகாப்பில் படிப்பை தொடர்ந்தார்,ரோஜா. அது சாமிதுரையின் புத்தியை கொலை செய்யும் அளவுக்கு கொன்று போனது. தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்க கூடாது என நினைத்து இளம்பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார். சம்பவத்தன்று இரவு நேரம்.. வீட்டில் யாருமில்லை என்று தெரிந்து கொண்ட இளைஞர், காதலியின் வீட்டிற்குள் நுழைந்தார். பார்த்ததும் மிரண்டு போன ரோஜா செய்வதறியாமல் திகைத்து போனார். காதலியிடம் கடைசியாக காதல் செய் என கேட்ட போது, ரோஜா தனது முடிவில் உறுதியாக இருந்தார். அப்போதுதான் அந்த கொடூரம் அரங்கேறியது.
ரோஜாவுக்கும் சாமிதுரைக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற சாமி சைக்கோவாக மாறினார். வீட்டிலிருந்த டீசலை எடுத்து ரோஜாவின் மீது ஊற்றினார். எரித்து விடலாம் என்று நினைத்து தீயை மூட்டுவதற்குள், எப்படியோ அங்கிருந்து ரோஜா வெளியே ஓடினார். டீசல் பட்டு கண் எரிச்சலுடன் கதறி கொண்டே ஓடியவரை விரட்டி சென்ற சாமிதுரை கீழே பிடித்து தள்ளினார். அதில், நிலைதடுமாறி விழுந்த பெண்ணின் தலையில் பெரிய கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்திருக்கிறார். பின்னர் ஆத்திரம் அடங்கியதும் அங்கிருந்து சாமிதுரை தப்பியோடி தலைமறைவாகினார்.
இந்நிலையில் வெளியே சென்றிருந்த முருகேசன் வீடு திரும்பிய போது அங்கு தனது மகள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே ரோஜாவை சிகிச்சைக்காக கூடமலை உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்ல, மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கெங்கவள்ளி போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு தப்பியோடிய சாமிதுரையை தீவிரமாக தேடி வருகின்றனர். காதலை ஏற்க மறுத்த பெண் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | மனைவிக்கு ஆறுதலாக இருந்த தந்தை - ஆக்ரோஷத்தில் கட்டையால் அடித்து கொன்ற மகன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR