Madurai News: மதுரை கோச்சடை முத்துராமலிங்க தேவர் தெருவைச் சேர்ந்தவர் தீர்த்தம் என்பவரின் மகன் பரிதி விக்னேஸ்வரன். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் ஜூடோ விளையாட்டு வீரரான பரிதி பல்வேறு போட்டிகளிலும் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்த நிலையில் அடுத்த மாதம் மாநில அளவில் நடைபெறும் ஜூடோ போட்டியில் கலந்து கொள்வதற்காக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் (ஜூலை 26) கோச்சடை பகுதியில் பரிதி விக்னேஸ்வரன் தனது நண்பர் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது, கோச்சடை முத்தையா கோவில் அருகே மின்கம்பம் ஒன்று பழுதாகி சேதமடைந்து இருந்திருக்கிறது. பழுதான மின்கம்பத்தை மின்சார வாரிய ஊழியர்கள் கிரேன் மூலம் அகற்றி மற்றொரு புதிய மின்கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது.
அப்பொழுது கிரேனில் இருந்த மின்கம்பம் அறுந்து சாலையில் விழுந்துள்ளது. அந்த சமயத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த மாணவன் பரிதி விக்னேஷ்வரன் மீது மின்கம்பம் விழுந்ததில் மாணவனின் இடது கணுக்கால் முறிந்துள்ளது. இதனால் துடிதுடித்து அப்படியே கீழே விழுந்துள்ளான்.
மாணவன் பரிதியை சக நண்பர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மின்கம்பம் மாற்றும் பணியின்போது எந்தவித அறிவிப்பு பலகையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் பின்பற்றாமல் மிகவும் அலட்சியமாக மின்வாரியத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட பணிகளாலயே விக்னேஸ்வரனின் கணுக்கால் துண்டானதாக உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இன்னும் ஓரிரு வாரங்களில் நடைபெறும் ஜூடோ போட்டியில் மாநில அளவில் கலந்துகொள்ள தயாராக இருந்த மாணவன் பரிதி விக்னேஸ்வரன், மின் வாரிய துறையின் அலட்சியத்தால் கால் துண்டாகி தற்போது எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகி விட்டதாக தாய் கண்ணீர் வடிக்கிறார். கிரேன் ஆபரேட்டர் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் இருவர் என மூன்று பேர் மீது எஸ்.எஸ். காலனி காவல்துறையினர் வழக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | ஊழலுக்கு எதிரான போராட்டம் எப்போதும் தொடரும்-அண்ணாமலை பேட்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ