பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை: முதல்வர் நன்றி

பொது நிவாரண நிதியாக இதுவரை ரூ.181 கோடி பெறப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 23, 2021, 09:33 PM IST
பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை: முதல்வர் நன்றி title=

தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு வாரமாக தளர்வுகளுடன் ஊரடங்கு விதிக்கப்பட்டு இருந்தது. எனினும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நாளை முதல் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு நேற்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் கொரோனா (Coronavirus) தடுப்பு பணிகள், சிகிச்சை, நிவாரணம் உள்ளிட்ட தேவைகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும்படி தமிழக அரசு (Tamil Nadu government) கேட்டுக்கொண்டது. அதன்படி பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் நன்கொடை வழங்கி வருகின்றனர். 

ALSO READ | மே 25 முதல் தொழிற்சாலை வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம்!

இந்நிலையில், இன்று வரை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 181 கோடி ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடை கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இதுவரை பெறப்பட்ட தொகையில் இருந்து ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை கொண்டு வரவும் முதற்கட்டமாக 50 கோடி ரூபாயை முதற்கட்டமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நாள்தோறும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் 1.6 லட்சம் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த பரிசோதனைகளுக்காக கிட்களை வாங்க 50 கோடி ரூபாயை இரண்டாம் கட்டமாக வழங்கவும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News