தமிழகத்தில் தீப்பெட்டி ஆலை தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நூயின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், தமிழகமே முழு முடக்கத்தில் தவித்து வருகின்றனர். ஏழை, எளிய மக்கள் அனைவரும் ஒருவேளை உணவிற்கு தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் தீப்பெட்டி ஆலை தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக சமூக விலகலை உறுதி செய்ய, மாநில பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-யின் கீழ் கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்களின் சிரமங்களை குறைப்பதற்காக பல்வேறு தரப்பினருக்கும் கொரோனா சிறப்பு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக, தமிழகம் முழுவதும் உள்ள 1,778 தீப்பெட்டி தொழிற்சாலைகளில் ESI- ன் (தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம்) கீழ் பதிவு பெற்ற 21,770 தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இதற்காக 2,177 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக" அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.