தேசத்துரோக வழக்கு பதியப்பட்டிருந்தால் திரும்பப் பெறுக -விஜயகாந்த்!

இயக்குனர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீது, தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்காக தேசத்துரோக வழக்குகள் பதியப்பட்டிருந்தால், அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Last Updated : Oct 6, 2019, 03:04 PM IST
தேசத்துரோக வழக்கு பதியப்பட்டிருந்தால் திரும்பப் பெறுக -விஜயகாந்த்! title=

இயக்குனர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீது, தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்காக தேசத்துரோக வழக்குகள் பதியப்பட்டிருந்தால், அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., "'தேச துரோக வழக்கு' என்பது தேசத்திற்கு எதிராக மாறுபட்ட கருத்தோடு, கருத்துக்களை பதிவு செய்வதும் வன்முறையில் ஈடுபடுவதும் தான் ஒரு குற்றமாக இருக்க முடியும். தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு கடிதம் எழுதுவதே தேசிய குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படுவது சரியானது அல்ல. இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்குகள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்காக போடப்பட்டு இருந்தால், அதை உடனடியாக திரும்பப்பெற்று, உண்மையான தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பகிர்கின்ற ஒரு உரிமையை அனைவருக்கும் தர வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நாட்டில் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்களை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கு கோரி திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் கடந்த ஜூலை 24-ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.

மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், அனுராக் காஷ்யப், அபர்ணா சென், கொங்கொனா சென் சர்மா, சவுமிதா சாட்டர்ஜி உள்பட 50 திரைப் பிரபலங்கள் கூட்டாகச் சேர்ந்து அந்த கடிதத்தில் நீண்ட கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில் பிரபலங்கள் குறிப்பிட்டதாவது,“நாட்டில் மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலேயே ஒருவரை தேசவிரோதி, அர்பன் நக்சல் என முத்திரை குத்தப்படுவதை ஏற்க முடியாது. எந்த ஒரு குடிமகனும் தமது சொந்த தேசத்தில் உயிர் அச்சத்துடன் வாழக்கூடாது” என்பது உள்ளிட்ட பல கருத்துகளை குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த மனுவில், நாட்டின் உருவாக்கத்தை சீர்குலைத்ததாகவும், பிரதமரின் செயல்திறனுக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு கையெழுத்திட்ட 50 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

Trending News