நடுக்கடலில் இலங்கை தீவிர ரோந்து, ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் ராமேஸ்வரம் மீனபிடி விசைப்படகுகள் மீன்பிடிப்பதாக வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட இலங்கை கடற்படை: இலங்கை எல்லை என தெரியாமல் தவறுதலாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்ததாக மீனவர்கள் விளக்கம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 24, 2022, 10:59 AM IST
  • ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை.
  • ஜிபிஎஸ் வரைப்படத்தை வெளியிட்ட இலங்கை கடற்படை.
நடுக்கடலில் இலங்கை தீவிர ரோந்து, ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு title=

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வரம் படகுகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை கடற்படையினர் மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதை வீடியோ பதிவு  செய்து ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளனர்.தவறுதலாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து விட்டதாக ராமேஸ்வரம் மீனவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். வங்ககடலில் ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக கடந்த 18ஆம் தேதி முதல் ஒரு வார காலமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

தற்போது காற்றின் வேகம் சற்று குறைந்ததையடுத்து மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல மீன் வளத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்ததின் அடிப்படையில் இன்று 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

மேலும் படிக்க | இலங்கையில் கடும் பஞ்சம்: கை குழந்தையுடன் இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்

இந்நிலையில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீன்பிடி படகுகளில் ஏறிய இலங்கை கடற்படை எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்ததாக குற்றம்சாட்டி படகில் பிடித்து வைத்திருந்த மீன் மற்றும் மீன்பிடி சாதனங்களை அள்ளி சென்றதுடன் படகில் இருந்த மீனவர்கள் மீது சரமரியாக தாக்கி திருப்பி அனுப்பி உள்ளனர்.

இதனிடையே எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் சுமார் 30க்கும் மேற்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீன்பிடி விசைப்படகுகள் நுழைந்து அதனை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இலங்கை கடல் வளத்தை அழித்ததாக ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிக்கும் மீன் பிடி படகுகளை படகு எண்ணுடன் வீடியோ எடுத்து ஜிபிஎஸ் ஆதாரத்துடன் எல்லை தாண்டிய படகுகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.

நடுக்கடலில் இந்திய, இலங்கை எல்லை தெரியாததால் தவறுதலாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து விட்டதாகவும், இலங்கை கடற்படை எச்சரித்ததுடன் இந்திய கடற்பரப்பிற்குள் வந்து விட்டதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தரப்பில் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க | இலங்கை கடற்படையால் இராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு வைகோ கண்டனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News