வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஒருசில இடங்களில் மழையோ, அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இயக்குனர் கூறுகையில்...!
தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் அந்தமான், வங்ககடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. சிதம்பரம், பண்ருட்டி, லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில், அண்ணாமலைநகர் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 23.40 மில்லி மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக அண்ணாமலைநகரில் 0.20 மில்லி மீட்டரும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.