இரு நாட்களாக வேகாத சிக்கன் விவகாரம் புகழ்பெற்ற KFC நிறுவனத்துக்கு சிக்கலை உருவாக்கி வந்தது. சென்னை அம்பத்தூரை சேர்ந்த சேகர் என்பவர் ஸ்விக்கி ஆன்லைன் உணவு டெலிவரி தளம் மூலம் KFC-ல் SMOKY GRILLED CHICKEN ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரத்தில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வந்தவுடன் அதனை வாங்கி திறந்து பார்த்துள்ளார். அதில், சிக்கன் வேகாமல் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் பற்றிய தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வைரல் ஆன நிலையில், தற்போது KFC நிறுவனம் இதற்கு விளக்கமளித்துள்ளது.
வேகாத சிக்கன் குறித்து பரவிய வைரல் செய்தி பற்றி விளக்கமளித்த KFC நிறுவனம், “KFC இந்தியாவில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த அளவிலான உணவுப் பாதுகாப்பை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எங்கள் உணவகங்களில் வழங்கப்படும் அனைத்து கோழி இறைச்சி உணவு வகைகளும் தினமும் புதிதாகத் தயாரிக்கப்படுகின்றன.
குறிப்பாக ஸ்மோக்கி ரெட் சிக்கன் உணவு வகை (Smoky Red chicken variant) 180 முதல் 250 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் பொறிக்கப்படுகின்றன. கூடுதலாக, KFC உணவகங்களில் நாங்கள் பரிமாறும் கோழி, சப்ளையர்களின் பண்ணையில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு 34 தர சோதனைகளுக்கு உட்பட்ட பிறகே வழங்கப்படுகின்றன. KFC இல் வழங்கப்படும் தயாரிப்புகள் மிக உயர்ந்த தரம் வாய்ந்தவை மற்றும் நுகர்வுக்கு முற்றிலும் பாதுகாப்பானவை என்பதை வாடிக்கையாளர்களுக்கு உறுதிப்பட தெரிவித்துக்கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | KFC அனுப்பிய வேகாத சிக்கன்; ஸ்விகியில் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
நடந்தது என்ன?
ஸ்விக்கி மூலம் தான் ஆர்டர் செய்த சிக்கன் சரியாக வேகாமல் தனக்கு டெலிவரி செய்யப்பட்டதை அடுத்து, அம்பத்தூரை செர்ந்த சேகர் என்பவர், சம்பவம் குறித்து KFC அம்பத்தூர் கிளையில் புகாரளித்துள்ளார். ஆனால், அவருக்கு அங்கு சரியான பதில் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் நடந்த சம்பவம் பற்றி பதிவிட்டு SWIGGY நிறுவனம், KFC நிறுவனம் மற்றும் இந்திய உணவு தர கட்டுப்பாட்டு வாரியம் (FSSAI) ஆகியவற்றை tag செய்து பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ஸ்விக்கி மற்றும் கே.எஃப்.சி நிறுவனங்கள், இது குறித்து விசாரணை மேற்கொள்வதாக உறுதி அளித்தன. இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்தனர். எனினும், இந்த ஆய்வில், சேகர் என்பவருக்கு வழங்கப்பட்ட சிக்கன் மட்டுமே வேகாத நிலையில் வழங்கப்பட்டது தெரிய வந்தது.
தற்போது KFC நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தை தொடர்ந்து இது தொடர்பான சலசலப்பு சற்று அடங்கியுள்ளது. மேலும், அதிகாரிகள் செய்த ஆய்விலும், அந்த ஒரு டெலிவரியில் மட்டுமே வேகப்படாத சிக்கன் அளிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணத்தையும் நிம்மதியையும் அளித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ