நாகையில் கைவிலங்குடன் தப்பிய கைதி - சென்னையில் சுற்றிவளைத்து கைது செய்த போலீஸ்!

நாகையில் போலீசார் அசந்து தூங்கிய நேரம் பார்த்து கைவிலங்குடன் தப்பியோடிய கைதியை தனிப்படை போலீசார் சென்னையில் சுற்றிவளைத்து கைது செய்தனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 23, 2022, 02:03 PM IST
  • நாகையில் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்ட கைதி கைவிலங்குடன் தப்பியோட்டம்
  • தப்பியோடிய கைதியை சென்னையில் சுற்றிவளைத்து கைது செய்த தனிப்படை போலீசார்
நாகையில் கைவிலங்குடன் தப்பிய கைதி - சென்னையில் சுற்றிவளைத்து கைது செய்த போலீஸ்! title=

நாகை மாவட்டம் நாகூர் வடகுடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன் (வயது 29). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளது. இந்த நிலையில்  கோபிசெட்டிபாளையம் பகுதியில் திருட்டு வழக்கு ஒன்றில் தனசேகரன் கைது செய்யப்பட்டு அங்குள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தவிர நாகை காவல் நிலையத்தில் ஏற்கனவே தனசேகரன் மீது வழக்கும் உள்ளது. இது தொடர்பான வழக்கு நாகை நீதிமன்றத்தில் நடந்து வந்தநிலையில் தனசேகரனை நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த 17 ம் தேதி கோபிசெட்டிபாளையததில் இருந்து வேளாங்கண்ணி போலீசார் காவல் வாகனத்தில் அழைத்துச் வந்தனர்.

தஞ்சை மாவட்டம் வளம்பகுடியில் அருகே காவலர்கள் இயற்கை உபாதை கழிக்க வாகனத்தை நிறுத்திவிட்டு இரண்டு காவலர்கள் சென்றபோது, காவல் வாகனத்தில் இருந்த 2 காவலர்கள் அசந்து தூங்கியதாக கூறப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்ட கைதி தனசேகரன் கைவிலங்குடன் தப்பி சென்றுள்ளார். 

மேலும் படிக்க | குப்பை கொட்ட போன சாக்கில்... குட்பை சொல்லி கைதி ஓட்டம்..!!!

கை விலங்குடன் கைதி தப்பிச் சென்ற சம்பவத்தில் பணியில் அலட்சியமாக இருந்த வேளாங்கண்ணி காவல்நிலைய எஸ்.ஐ கலியமூர்த்தி, காவலர்கள் மணிகண்டன், ஜெகதலபிரதாபன், விஜயக்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டார். 

இதன் பின்னர் கைவிலங்குடன் தப்பிச் சென்ற கைதியை பிடிக்க தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டனர். நாகை டிஎஸ்பி சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை கேளம்பாக்கத்தில் பதுங்கி இருந்த கைதி தனசேகரனை சுற்றிவளைத்து கைது செய்தனர். கைவிலங்குடன்  தப்பிச்சென்ற கைதி தனிப்படை போலீசாரின் தேடுதல் வேட்டைக்கு பின் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதால், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீசார்ஒரு வாரத்துக்கு பிறகு நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News