மத ரீதியான உணர்வுகளை புண்படுத்தும் வகையில் யாரும் நடந்து கொள்ள கூடாது: அமைச்சர் மா. சு

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி முதல்வர், ஜம்மு- காஷ்மீர் மாணவர்களின் தாடியை எடுக்கச் சொன்ன விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Mar 6, 2024, 04:54 PM IST
மத ரீதியான உணர்வுகளை புண்படுத்தும் வகையில் யாரும் நடந்து கொள்ள கூடாது: அமைச்சர் மா. சு title=

செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜம்மு காஷ்மீர் மாணவர்களை ஷேவ் செய்ய சொன்னது தொடர்பாக அமைச்சர் மா. சுப்பிரமணியம் பேட்டி அளிக்கையில், மத ரீதியான உணர்வுகளை புண்படுத்தும் வகையில் யாரும் நடந்து கொள்ள கூடாது என்று திட்டவட்டமாக கூறி விட்டோம் என கூறினார்.  

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ரூ. 256.50 கோடி திட்ட மதிப்பீட்டில் தீவிர சிகிச்சை மற்றும் அவசர பிரிவு கட்டடம், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டடம், செவிலியர் பயிற்சி பள்ளி கட்டடம், அரசு பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கூடுதல் தளங்கள் கட்டடம் மற்றும் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் புதிய அடுக்குமாடி உயர்தர சிகிச்சை கட்டடம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி முதல்வர், ஜம்மு- காஷ்மீர் மாணவர்களின் தாடியை எடுக்கச் சொன்ன விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் அமைப்பு சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு செய்திருந்தனர். அதில் காஷ்மீரை சேர்ந்த 24 மாணவர்களை செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வர் தாடி வழிக்க சொன்னதாக கூறினார்கள். 

இதை அறிந்ததும் கல்லூரி முதல்வரிடம் தொடர்பு கொண்டு கேட்டோம் அதற்கு அவர் தேர்வு நடைபெறுவதால் ஷேவ் செய்து விட்டு வர சொல்லி ஒரு பொது தகவலை தான் சொன்னதாகவும் நான் அவ்வாறு கூறவில்லை என்றும் பதிலளித்தார் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | பாஜக கூட்டணியில் இணைந்த சரத்குமார்! எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது?

எந்த மதத்தினரோ, மாநிலத்தவரோ அவர்களுக்கான மத மற்றும் மாநில அடையாளங்களை நான் எதும் செய்ய கூடாது. 36 மாநிலங்களில் இருந்து வருவார்கள். மத ரீதியான உணர்வுகளை புண்படுத்தும் வகையில் யாரும் நடந்து கொள்ள கூடாது என்று கூறி விட்டோம். ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் அதற்கு நன்றி தெரிவித்து கடிதமும் அனுப்பி உள்ளனர்.

மற்ற மாநிலங்களில் மத்திய அரசு நிதி ஆதாரத்தில் இருந்து கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டில் மட்டும் ஏன் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் நிதி பெற்று கட்டப்படுகிறது என்று அப்போதைய தமிழ்நாட்டு முதல்வர் ஏன் கேள்வி கேட்கவில்லை எனவும் மா. சுப்பிரமணியம் கூறினார்.

ஒரு ரூபாய் கூட மாநில அரசின் நிதி பங்களிப்பு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தர வேண்டியது இல்லை. இதில் முழுமையாக மத்திய அரசின் நிதி பங்களிப்பு தான் உள்ளது. நேற்று  மீண்டும்  தொடங்கிய எய்ம்ஸ் மருத்துவமனை  பூஜை  உண்மையான பூஜையாக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறினார்.

மேலும் படிக்க | பாஜகவின் தாமரை மலர்ந்தால் இந்த தேசம் சுடுகாடாக மாறும் - செல்வப்பெருந்தகை விளாசல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News