தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணா சாலையில் இருக்கும் மின்துறை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது மேலும் பேசிய செந்தில் பாலாஜி, “ தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது. மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 100 யூனிட்டுகள் வரை கட்டணத்தில் மாற்றமில்லை. 200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் உயர்கிறது.
ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு திட்டம் கொண்டு வர திட்டம். கடுமையான கடன் சுமையில் சிக்கி தவிக்கிறோம். எந்த வங்கியிலும் கடன் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.குஜராத் 1045 ரூபாயும், கர்நாடகவில் 1200 ர் ரூபாய்வரைக்கும் 200 யூனிட்டுகள் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | மாணவியின் உடல் மீண்டும் போஸ்ட் மார்டம் | தந்தை கண்முன் நடத்த நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த ஒன்றிய அரசு 23 முறை கடிதம் எழுதியுள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது.
விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். 42 சதவீதம் வீடுகளுக்கு மின் கட்டணத்தில் மாற்றம் இருக்காது. ரயில்வே மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு 65 காசுகள் உயர்கிறது" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ