போலீஸ் அதிகாரியே முக கவசம் அணியாமல் போலீசாரிடம் வாக்குவாதம்!

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் போலீஸ் அதிகாரியே பொது இடத்தில் முக கவசம் அணியாமல் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.  

Last Updated : Jan 22, 2022, 04:04 PM IST
  • முக கவசம் அணியாமல் செல்லக்கூடிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராத தொகையும் வசூல் செய்து வருகின்றனர்.
  • சோதனை சாவடி அமைத்து வாகன தணிக்கை மேற்கொண்டு அபராத தொகையை வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
போலீஸ் அதிகாரியே முக கவசம் அணியாமல் போலீசாரிடம் வாக்குவாதம்!  title=

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக வாகன சோதனை சாவடி அமைத்து முக கவசம் அணியாமல் செல்லக்கூடிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராத தொகையும் வசூல் செய்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணா நகர் போலீஸ் நிலைய போலீசார் 3வது அவென்யூ பகுதியில் சோதனை சாவடி அமைத்து வாகன தணிக்கை மேற்கொண்டு முக கவசம் (Face Mask) அணியாமல் வர கூடிய நபர்களை பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராத தொகையை வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். 

ALSO READ | பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்த பேருந்தில் தீடீர் தீ விபத்து!

அப்போது அவ்வழியாக முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி முக கவசம் அணியாமல் சென்றதற்கு அபராத தொகை செலுத்துமாறு சப் இன்ஸ்பெக்டர் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தபடி " 3 முறை கொரோனா தடுப்பூசி (Covid Vaccine) போட்டாச்சு பின் எதற்கு முக கவசம் அணிய வேண்டும்" என சப் இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அபராதம் விதித்து செலான் கொடுப்பதற்கு சப் இன்ஸ்பெக்டர் முயன்ற போது செலான் போடும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது என அந்த நபர் சப் இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

 

பின்னர் போலீசார் அந்த நபரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அவர் மீது முக கவசம் அனியாத வழக்கும் பதிவு செய்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் வாக்குவாதத்தில் ஈடபட்ட நபர் போலீஸ் பயிற்சி கல்லூரியில் டி.எஸ்.பி-யாக பணியாற்றி வருபவர் என்பதும் விடுமுறையில் அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளதும் தெரியவந்தது. முககவசம் அணியாமல் சென்றதாக சட்டக்கல்லூரி மாணவர்  தாக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது போலீஸ் உயரதிகாரி ஒருவர் அதே போன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் முக கவசம் அணியவேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் போலீஸ் அதிகாரியே முக கவசம் அணியாமல் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ | இடிந்து விழுந்த ராட்சத பாலம் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தொழிலாளர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News