பிரதமர் நரேந்திர மோடியும், பியர் கிரில்ஸும் மேன் வெர்சஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சிக்காக உத்தரகாண்ட்டில் இருக்கும் ஜிம் கார்பெட் தேசிய வனவிலங்கு பூங்காவில் 2019ஆம் ஆண்டு சாகச பயணம் மேற்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்பட்டது. நாட்டின் பிரதமர் உலகப் புகழ்பெற்ற நிகழ்ச்சிக்காக சாகச பயணம் மேற்கொண்டதால் இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கானோர் பார்த்தனர்.
அந்தப் பயணத்தின்போது கிரில்ஸிடம் பேசிய மோடி, “சிறு வயதில் நான் சிறுவனாக இருந்தபோது குளத்துக்கு சென்றேன். அப்போது அங்கிருந்த ஒரு முதலைக் குட்டியை நான் வீட்டுக்கு எடுத்துவந்துவிட்டேன்.
அதைப் பார்த்த எனது அம்மா, இது தவறு. இதை நீ செய்திருக்கக்கூடாது. முதலைக் குட்டியை மீண்டும் குளத்தில் விட்டுவிடு என்றார். நானும் அதன்படியே செய்தேன்” என்றார்.
மோடியின் இந்தப் பேச்சு கடுமையான ட்ரோல்களை சந்தித்தது. தற்போதுவரையும் பிரதமர் மோடியை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்பவர்கள் இந்தச் சம்பவத்தை மறக்காமல் குறிப்பிடுவார்கள்.
இந்நிலையில் மோடி கூறிய இந்தக் கதை தற்போது தமிழ்நாடு மெட்ரிக் ஒன்றாம் வகுப்பு பொது அறிவு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் மோடி படத்துடன் அவர் கூறிய கதை குறித்து, “சிறு வயதில் மோடி மிகவும் தைரியமாக இருந்தார். ஒருமுறை முதலைக் குட்டியை பிடித்து வீட்டுக்கு கொண்டுவந்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மோடி கூறியது உண்மையா, பொய்யா என்றே தெரியாமல் எப்படி அதனை பாடப்புத்தகத்தில் சேர்க்கலாம் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR