சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து அளித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்பதை முன்னிறுத்திப் பேசினார். பிளாஸ்டிக் பயன்பாட்டால் நிலம், காடுகள், ஏரிகள், குளங்கள், மாசுபடுவதாக பேசிய அமைச்சர், கடல் வாழ் உயிரினங்களான ஆமை போன்றவை பிளாஸ்டிக்கை உண்ணுகிறது என்றும் அதை மனிதர்களும் உண்ணுகிறார்கள் என்றும் பேசினார்.
தொடர்ந்து பேசியவர், பிளாஸ்டிக் நுண்துகள்கள் மனிதர்கள் ரத்தில் இருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன இது வேதனை அளிப்பதாக உள்ளது எனத் தெரிவித்தார். பிளாஸ்டிக்கை ஆரம்ப நிலையிலையே தடுக்க வேண்டும், பள்ளி குழந்தைகள் பிளாஸ்டிக்கை பயன்படுத்தமாட்டேன் என அவர்களை உறுதிமொழியேற்க வைக்க வேண்டும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
மேலும் படிக்க | மறைந்த நடிகர் விவேக் மனைவியின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றுமா?
பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பிறகு 1,682 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, 105 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும். பிளாஸ்டிக்கை தடை செய்ய சென்னை மாநகர மேயரும், மாநகராட்சி ஆணையர் ககந்தீப்சிங் பேடியும் தீவிரமாக செயலாற்றுவதாக அமைச்சர் மெய்யநாதன் பாராட்டு தெரிவித்தார்.
மேலும் படிக்க | தனியார் சொகுசு ஓட்டல் அதிபரை கடத்திய கும்பல் போலீசில் சிக்கியது எப்படி ?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR