ஆளுநர் வருகையால் பெரியார் பல்கலைக்கழகத்தில் கருப்பு உடை அணிய தடை..!

சேலத்தில் உள்ள பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள இருக்கிறார். இந்த விழாவில் கருப்பு நிற உடைக்கு அனுமதி மறுக்கப்பட்டுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : Jun 27, 2023, 01:11 PM IST
  • சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது
  • ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
  • இந்த விழாவில் கருப்பு உடை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் வருகையால் பெரியார் பல்கலைக்கழகத்தில் கருப்பு உடை அணிய தடை..! title=

சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்க உள்ளார். விழா நாளை நடைபெற உள்ள நிலையில் கல்லூரி நிர்வாகம் இன்று ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில், மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 பெரியார்பல்கலை கழகம் அறிவிப்பு

பெரியார் பல்கலைக்கழகத்தில் வருகின்ற 28ஆம் தேதி (நாளை) பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்க வருவதை ஒட்டி பல்வேறு கட்சிகள் சார்பில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அக்கல்லூரி நிர்வாகம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க | முடிவுக்கு வருகிறதா கே.எஸ். அழகிரியின் பதவிக்காலம்?

கருப்பு உடை அணிய தடை...

பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதில் “மேதகு ஆளுநர் அவர்கள் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்பந்தமாக பல்கலைக்கழகத்தினை ஆய்வு செய்ய வந்த காவல்துறை ஆணையர் அவர்கள் கருப்பு நிற உடை அணிந்து வருபவர்களை பாதுகாப்பு காரணங்களுக்காக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கத்தில் அனுமதிக்க முடியாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு அறிவுருத்தல்..

பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பினை  பதிவாளரை சுற்றறிக்கையாக அனுப்பி மாணவர்களுக்கு தெரியப்படுத்த கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பட்டமளிப்பு விழா அரங்கிற்குள் பட்டம் பெறும் மாணவர்கள் கருப்பு வண்ண உடை அணிந்து கொண்டு வர வேண்டாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  விழாவிற்கு வரும் ஒவ்வொருவரும் கருப்பு உடை தவிர மாற்று உடை அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | திமுகவை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி - சேலத்தில் பரபரப்பு பேச்சு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News