திருப்பத்தூர் : மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு நேற்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதத்தின் முதல் வாரத்தில் பேரறிவாளன் தவறாமல் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் திருப்பத்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எனது மகனின் உடல்நிலை சீராக உள்ளதற்கு முக்கிய காரணம் 9 மாத காலமாக பரோலை நீட்டித்ததுதான் காரணம். தற்போது சுதந்திரமாக இருப்பதால் திருமணம் செய்து கொள்வதாக பேரறிவாளன் கூறியுள்ளார். இதனால், முதல் ஏற்பாடாக பேரறிவாளனுக்கு திருமணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் எனது மகன் விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டவர்.
மேலும் படிக்க | பேரறிவாளனுக்குப் பிணை: கால்நூற்றாண்டு சட்டப்போராட்டத்தின் முக்கிய மைல் கல்-சீமான்
இப்போதைக்கு அதற்கான பொருளாதார வசதி இல்லை. வருங்காலத்தில் கண்டிப்பாக விவசாயத்தில் பேரறிவாளன் ஈடுபடுவார். 30 வருடங்கள் போராட்டத்திற்கு பிறகு என் மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது அளவில்லாத மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசு மற்றும் முதலமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறினார்.
இதன்பின்னர் பேரறிவாளனின் வழக்கறிஞர் சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ‘ 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இது வருத்தம் அளிக்கிறது. 31 ஆண்டுகளில் சிறையில் அவருடைய நன்னடத்தையை பாராட்டியும், 10 மாத கால உடல்நிலையை கருத்தில்கொண்டும் இந்த ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. நீண்ட நெடிய போராட்டத்தில் ஒரு சாமானியனுக்குக் கிடைத்த வெற்றி இது.
மேலும் படிக்க | எழுவர் விடுதலை தொடர்பாக அற்புதம்மாளின் உருக்கமான ட்விட்டர் பதிவு!
இதே போன்று இந்தியா முழுவதும் வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கும் எண்ணிலடங்கா நபர்களுக்கு இந்த உத்தரவு பெரும் ஊக்கத்தை அளிக்கும். நீதி கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் கொடுக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இனி பேரறிவாளன் விடுதலை குறித்து கவனம் செலுத்துவோம்’ என்றார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR