அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை பெருக்கும் வகையில் பேருந்துகளில் உள்ள உபயோகப்படுத்தப்படாத சுமைப் பெட்டிகளை மாத வாடகைக்கு விடும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்தத் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. தனியார் ஆம்னி பேருந்து மற்றும் லாரியைவிட அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் கட்டணம் குறைவாகவும், அதே நேரத்தில் பார்சல் ஒரேநாளில் சென்றடையும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக திருச்சி, மதுரை, சென்னை மார்க்கத்தில் தங்களது சுமைகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் அனுப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.
80 கிலோ வரையிலான பார்சல்களுக்கு தினசரி திருச்சி முதல் சென்னைவரை ரூ.210, மதுரை முதல் சென்னைவரை ரூ.300, நெல்லை முதல் சென்னைவரை ரூ.390, தூத்துக்குடி முதல் சென்னைவரை ரூ.390, செங்கோட்டை முதல் சென்னைவரை ரூ.390, கோவை முதல் சென்னைவரை ரூ.330, ஓசூர் முதல் சென்னைவரை ரூ.210 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மயிலாடுதுறை: சினிமா பாணியில் இளம்பெண் கடத்தல்: கடைசி நிமிட டிவிஸ்ட்!
பொதுமக்கள் பார்சல்களை அனுப்ப சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள விரைவுப் போக்குவரத்து கழக அலுவலகங்களை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பார்சல்களை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் தமிழர்களை நியமிக்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்
மேலும் சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களுக்கும் பார்சல் அனுப்ப முன்பதிவு செய்யப்படுகிறது. மாத வாடகை அடிப்படையில் பொருட்களை அனுப்பும் போது பயனாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான பாஸ் வழங்கப்படும்.
மேலும் படிக்க | புதிதாக 44 படிப்புகள் அறிமுகம் - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ