திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருக்கோவில் படிப்பாதை மற்றும் யானை பாதை உள் பிரகாரம் வெளிப்பிரகாரம் பகுதிகளில் உள்ள உப சன்னதிகள் மலையின் மேல் உள்ள யாக சாலையுடன் இணைத்து சக்தி கொடுக்கும் கலாகர்சனம் நிகழ்வு நடைபெற்று வருகிறது. பழனி மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதையில் உள்ள 86 உப கோவில்கள் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள நான்கு மைல்கள் மற்றும் உப கோவில்கள் மலைக்கு மேல் உள்ள உள் பிரகாரம் வெளிப்பிரகாரம் பகுதிகளில் உள்ள 18 சித்தர்கள் உள்ளிட்ட 89 சுவாமிகள் சன்னதியில் கும்பாபிஷேக புனித நீர் திருக்குடங்கள் பூஜிக்கப்பட்டு யாகசாலைக்கு கொண்டு செல்லும் நிகழ்வு நடந்து வருகிறது. அதே போல யாகசாலையுடன் அனைத்து பிரகாரங்கள் மற்றும் கோபுரங்கள் இணைத்து சக்தி கொடுக்கும் நிகழ்வு நடந்து வருகிறது இதையொட்டி அனைத்து பிரகார தெய்வங்களும் திரையிடப்பட்டு மூடப்பட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து யாகசாலையில் இன்று மாலை 4 மணிக்கு முதல் கால யாக பூஜை தொடங்குகிறது, இதற்காக சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. அதேபோல அனைத்து உப சன்னதிகளுக்கும் காலை 9 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. அதேபோல இன்று மாலை 3 மணிக்கு மூலவர் சன்னதியில் உள்ள நவபாஷாண முருகன் சிலை அடைக்கப்படுகிறது மாலை 3 மணி முதல் கும்பாபிஷேகம் நடைபெறும் 27 ஆம் தேதி காலை வரை மூலவர் சன்னதியில் உள்ள முருகனை பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது 27 ஆம் தேதி கும்பாபிஷேக விழா முடிந்ததும் தீபாராதனை மூலவருக்கு காட்டப்பட்டு அதன் பின்னர் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும்.
அதுவரை திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு யாகசாலை பூஜை நடைபெறும் இடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட முருகனை பொதுமக்கள் தரிசனம் செய்யலாம். பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவரால் உபயமாக வழங்கப்பட்ட நவீன மின் இழுவைரயில் பெட்டி கோவிலில் ஒப்படைக்கப்பட உள்ளது. மேலும் தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் மலை மேல் பங்கேற்க குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 2000 பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் பணி என்று ரயில்வே பீட்டர் ரோடு பகுதியில் உள்ள வேலவன் விடுதியில் தொடங்க உள்ளது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் நன்கொடையாக சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிய நவீன மின் இழுவை ரயில் பெட்டி திருக்கோவிலில் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த ரயில் பெட்டியில் ஒரே நேரத்தில் 70 பேர் பயணம் செய்ய முடியும். இதற்கு முன்பு இயங்கிக் கொண்டிருக்கும் மின் இழுவை ரயில் பெட்டிகளில் முதல் மின் இழுவை ரயில் பெட்டியில் 32 பேரும் இரண்டாவது மின் இழுவை ரயில் பெட்டியில் 40 பேரும் மூன்றாவது மின் இழுவை ரயில் பெட்டியில் 36 பேரும் ஒரு நேரத்தில் பயணிக்க முடியும் ஒரு மணி நேரத்தில் 3 மின் இழுவை ரயில்களிலும் சுமார் 200 பேர் வரை பயணிக்க முடியும். இதில் முதல் மின் இழுவை ரயில் கடந்த 1965 ஆம் ஆண்டும் இரண்டாவது மின் இழுவை ரயில் கடந்த 1982 ஆம் ஆண்டும் மூன்றாவது மின் இழுவை ரயில் கடந்த 1988 ஆம் ஆண்டும் தொடங்கப்பட்டது.
மேலும் படிக்க | ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு காரணமாக சுற்றுலா பயணிகள் பாதிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ