தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது!
தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய்ய இயக்குநர் பாலச்சந்திரன் இதுகுறித்து தெரிவிக்கையில்...
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்பதால் மீனவர்கள் கடுலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்.. இந்தியப் பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 60கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால் இன்று முதல் 3 நாட்களுக்கு அந்தப் பகுதிகளுக்குத் தமிழக, புதுச்சேரி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.