OP Raveendranath Divorce Petition: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினரான ஓ.பி. ரவீந்திரநாத்குமாருக்கும், ஆனந்தி என்ற திருமணம் நடந்து மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே அண்மை காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். கருத்து வேறுபாடு என்ற காரணத்தை கூறி அவர் விவாகரத்து கோரியுள்ளார். இந்த மனு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு எண்ணிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இருவரும் மனமுவந்து விவாகரத்து மனு தாக்கல் செய்யவில்லை. ஓ.பி. ரவீந்திரநாத் குமார் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதால், இதற்கு அவரது மனைவி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த மனு விசாரணைக்கு வரும்போது ரவீந்திரநாத் குமார் நேரில் ஆஜராக வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க | TTF வாசனை கைது செய்த காவல்துறை! பிணையிலும் வர முடியாது!
முன்னதாக, ஓ.பி. ரவீந்திரநாத்தின் மீது சில மாதங்களுக்கு முன் ஒரு பெண் பாலியல் புகாரை அளித்தார். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காயத்ரி தேவி என்பவர், தான் ஓ.பி. ரவீந்திரநாத்தால் பாதிக்கப்பட்டதாக கூறி தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலை கடந்த ஆக. 1ஆம் தேதி அன்று சந்தித்து புகார் மனுவை அளித்தார். அந்த மனுவில், ஓ.பி. ரவீந்திரநாத் தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொள்கிறார் என்றும் போன் மேல் போன் செய்து ஆபாசமாக பேசுவதோடு தகாத உறவில் ஈடுபட தன்னை அழைப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
"'போன் எடுக்கலைன்னா வீட்டுக்கு வந்து விடுவேன், இல்லைனா கார் அனுப்புறேன் நீ வா' என்கிறார், ஓ.பி ரவீந்திரநாத். அவரின் அநாகரிக் செயல்கள் குறித்து ஓபிஎஸ்டமும் கூறியுள்ளேன்" என்று காயத்ரி தேவி கூறியிருந்தார். அதோடு இது தொடர்பான வாட்சப் சாட்டுகள் தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததற்கான ஸ்கிரீன்ஷாட் உள்ளிட்டவற்றை ஆதாரங்களுடன் பத்திரிகையாளர்கள் முன்பு காண்பித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும்,"இதே போல் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் ஒரு எம்பி வீட்டின் பெண்ணிடம் பேச முடியுமா அப்படி பேசினால் சும்மா விடுவார்களா.? இவ்வாறு பேசியதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தியும் அனுப்பினேன், அதற்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை, ஆனால் அவர் நண்பர்கள் இடத்தில் இருந்து மிரட்டல்கள் மட்டும் தொடர்ந்து வருகிறது" எனவும் குற்றஞ்சாட்டினார்.
இது ஒருபுறம் இருக்க தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இருப்பினும், அவர் மேல்முறையீடு செய்ததன் மூலம் அந்த தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, தற்போது வரை அவர் மக்களவை உறுப்பினராக தொடர்கிறார்.
மேலும் படிக்க | விஷத்தை திணிக்கும் மார்க் ஆண்டனி... படத்திற்கு தடை கோரும் திருநங்கை - முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ