உதகை சிறப்பு ரயில் சீசன் தொடங்கியாச்சு...கோடையை கொண்டாடுங்கள்!!

கோடை சீசனுக்காக மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை சிறப்பு மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் துவங்கபட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 15, 2023, 01:19 PM IST
உதகை சிறப்பு ரயில் சீசன் தொடங்கியாச்சு...கோடையை  கொண்டாடுங்கள்!! title=

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. கல்லார் முதல் குன்னூர் வரை பல் சக்கரத்தால் அமைந்துள்ள ரயில் பாதையில் பயணிக்கும் இந்த ரயிலின் எஞ்சின் வழக்கமான முறையில் இல்லாமல் பின் இருந்து முன்னோக்கி தள்ளும் வகையில் உள்ளது. அதுமட்டுமின்றி  அடர்ந்த வனப்பகுதியில் நடுவே பயணித்து செல்லும் இந்த ரயில் கற்பனைக்கு எட்டாத வகையில் அமைக்கபட்டுள்ள குகைகள், அடர்ந்த காடு அதில் உள்ள வன உயிரினங்கள் என கொட்டி கிடக்கும் இயற்கை அழகினை ரசிக்க  உள்நாடுகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் முன்பதிவு செய்து காத்திருந்து வருகின்றனர்.

மேலும் படிக்க | "பில் தானே கேட்டீங்க சீரியல் நம்பருமா கேட்டீங்க" வானதி சீனிவாசனின் பதில்

இருப்பினும் இந்த மலை ரயில் போக்குவரத்தில் நான்கு பெட்டிகள் மட்டுமே இனைக்கபட்டுள்ளதால் அனைவரும் இதில் பயணிக்க முடிவதில்லை. குறிப்பாக கோடை காலத்தில் நீலகிரிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் இந்த ரயில் மூலமாக பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம் தொடங்கியுள்ளது. 

காலை 9 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் இந்த ரயில் சிறப்பு கட்டணத்தில் இயக்கப்படுகிறது. முதல் வகுப்பு கட்டணமாக 1575 ரூபாயும், இரண்டாம் வகுப்பு கட்டணமாக 1065 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நீலகிரி மலை ரயில் நிர்வாகத்தின் சார்பில் இலவசமாக பிஸ்கட், குளிர்பானம், சாக்லேட் உள்ளிட்டவை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. 

இன்று காலை 9 மணிக்கு 172 சுற்றுலா பயணிகளுடன்  சிறப்பு மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு புறபட்டு சென்றது. கோடை சீசனுக்காக சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகவும் உற்சாகத்துடன் உதகை சென்றனர். அதே சமயத்தில் இந்த சிறப்பு மலை ரயில் வாரத்தில் இரு தினங்கள் மட்டும் இயங்கும்.  அதாவது, சனிக்கிழமை காலை 9 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து புறபட்டு ரயில் அடுத்த நாள் காலை உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மலை ரயிலை கோடை சீசனுக்காக வாரத்தில் அனைத்து நாட்களிலும் இயக்கினால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என பயணிகள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | கோடையில் நோ பவர்கட்: சம்மரில் கூலான செய்தி சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News