Senthil Balaji: ஒரு வருடமாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி! பண மோசடி வழக்கும் ஜெயில் பயணமும்..

One Year Of Senthil Balaji Arrest : செந்தில் பாலாஜி, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, இன்றுடன் 1 வருடம் நிறைவடைந்திருக்கிறது. இந்த நாளில், அவர் கைது செய்யப்பட்ட வழக்கு குறித்தும், அதன் தற்போதைய அப்டேட் குறித்தும் பார்க்கலாம்.   

Written by - Yuvashree | Last Updated : Jun 14, 2024, 07:50 AM IST
  • செந்தில் பாலாஜி கைது-ஓராண்டு நிறைவு!
  • நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
  • ஜாமீன் தருவதில் இழுபறி!
Senthil Balaji: ஒரு வருடமாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி! பண மோசடி வழக்கும் ஜெயில் பயணமும்.. title=

One Year Of Senthil Balaji Arrest : அதிமுக ஆட்சியின் போது, 2011-2015 ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர், செந்தில் பாலாஜி. அப்போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கு தருவதாக கூறி, சுமார் ரூ.1 கோடிய 62 லட்ச ரூபாயை இவர் மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண் குமார் ஆகிய மூவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். 

பண மோசடி வழக்கில் கைது:

செந்தில் பாலாஜி மீது புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து, அவர் இல்லம், அலுவலகம், நண்பர்களின் இல்லம் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்பட்டு, செந்தில் பாலாஜி உள்பட அவரது நன்பர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல், பண மோசடி ஆகிய பிரிவுகளில் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். செந்தில் பாலாஜியை கைது செய்த போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு, இதே ஜூன் மாதம் 14ஆம் தேதி கைதானார். 

ஜாமீன் வழங்க மறுப்பு!

செந்தில் பாலாஜி கைதாவதற்கு முன்பே, மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் இதை விசாரித்ததை தொடர்ந்து, இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டு விட்டதாக கூறி, வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், செந்தில் பாலாஜியின் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் அனைத்து அவருக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். 

கைதின் போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை காரணம் காட்டி, அவருக்கு ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்றாத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அப்போது வழக்கில் சம்பந்தப்பட்ட செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருந்ததால் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்க என்ன காரணம்? - நீதிபதி விளக்கம்

விசாரணையில் இழுபறி..

அமர்வு நீதிமன்றத்தில் தன் மீதான விசாரணை தொடங்குவதற்கு முன்பு, இது தொடர்பான ஆவணங்கள் தனக்கு வழங்கப்படும் வரை, இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தார். இந்த ஆவணங்கள் அவரிடையே கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, வங்கி பரிவர்த்தனை ஆவணங்கள் இல்லை எனக்கூறி அவையும் வேண்டும் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, செந்தில் பாலாஜி வேண்டுமென்றே விசாரணைக்கு இழுத்தடிக்க வேண்டும் என இப்படி செய்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

முக்கிய தீர்ப்பு..

கடந்த ஒரு வருட காலமாக விசாரணைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைப்பதும், அதை எதிர்த்து ஏதேனும் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் வழக்கு தொடருவதுமாக இருக்கிறார். இந்த நிலையில் ஜூன் 14ஆம் தேதியான இன்று, சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில், எந்த வங்கி அதிகாரிகள் பணியாற்றினார்கள் என்ற விவரங்களை வழங்கக்கோறிய வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News