நட்சத்திர ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட 1 மணி வரை அனுமதி.....

சென்னையில் நட்சத்திர ஹோட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை 

Last Updated : Dec 26, 2018, 01:41 PM IST
நட்சத்திர ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட 1 மணி வரை அனுமதி..... title=

சென்னையில் நட்சத்திர ஹோட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை 
மட்டுமே புத்தாண்டு கொண்டாட அனுமதி.....

புத்தாண்டு பிறக்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இதற்கான முன் ஏற்பாடுகள் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. மேலும், புத்தாண்டு அன்று மக்கள் நள்ளிரவில் கடற்கரை மற்றும் ஹோட்டல்கள் என பல இடங்களில் கூடி விமர்சையாக கொண்டடி வருகின்றனர். சென்னையில், புத்தாண்டு அன்று புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும். 

அந்த வகையில், வரும் 2019 ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர், புதிய கட்டுப்பாடுகளை மக்களுக்கு விதித்துள்ளனர். இந்த புதிய கட்டுபாடுகள் மூலம் மக்கள் எந்த வித அசம்பாவிதமும் இன்றி இந்த புத்தாண்டை கொடடுவதர்க்கு வழிகளை செய்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்ட கட்டுபாடுகள்:- 

 

  • நட்சத்திர ஹோட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை புத்தாண்டு கொண்டாட அனுமதி!
  • பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், பெண் காவலர்கள் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வைக்க சிறப்பு ஏற்பாடு!
  • நட்சத்திர ஹோட்டல்களில் மது அருந்திவிட்டு செல்வோர் பத்திரமாக வீடுகளுக்கு செல்வதற்கு தனியார் கால் டாக்சி நிறுவனங்கள் முன்வர வேண்டும்! 
  • நீச்சல் குளங்கள் அருகில் மேடை அமைக்கதடை!
  • நட்சத்திர ஹோட்டல்களில் அதிகளவில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட வேண்டும்!
  • டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜனவரி 1 ஆம் தேதி நள்ளிரவு 1 மணி வரை மட்டும் புத்தாண்டு கொண்டாட அனுமதி!
  • நள்ளிரவு 1 மணிக்கு மேல் மதுபாங்கள் விற்கத்தடை! 
  • நட்சத்திர விடுதிகளில் வாகனங்கள் இல்லையென்றால், காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும்!
  • இந்த கட்டுபாடுகளை, மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்!

 

Trending News