தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் சில்லரை கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்து வருகிறது. தினமும் சராசரியாக, பல கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்கப்படுகின்றன. இது சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களில் அதிகரிக்கும். டாஸ்மாக்கை பொறுத்தவரை, சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம், மகாவீர் ஜெயந்தி உள்ளிட்ட நாள்களில் விடுமுறை ஆகும். அந்த வகையில் இந்த வருட சுதந்திர தினத்துக்கும் டாஸ்மாக்குக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே குடிமகன்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி குடிப்பதற்காக ஆகஸ்ட் 14ஆம் தேதியே தங்களுக்கு தேவைப்படும் மதுபாட்டில்களை வாங்கினர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது.
மேலும் படிக்க | மது அருந்த பணம் இல்லாததால் ஏ.டி.எம்-ஐ உடைத்த ஆசாமி!
இந்நிலையில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி டாஸ்மாக் கடைக்கு அளிக்கப்பட்ட விடுமுறையையொட்டி முதல் நாளான ஆகஸ்ட் 14ஆம் தேதியில் எவ்வளவு ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக்குக்கு விடப்பட்ட விடுமுறையால் மொத்தம் 273.92 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 58.26 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. மதுரைக்கு அடுத்ததாக சென்னை மண்டலத்தில் 55.77 கோடி ரூபாய்க்கு மது விற்ப்னையானது.
மேலும், சேலம் மண்டலத்தில் 54.12 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 53 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 52.29 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வருடத்தில் தொழிலாளர் தினத்தையொட்டி (மே 1) டாஸ்மாக்குக்கு விடப்பட்ட விடுமுறையின்போது மதுரை மண்டலமே மது விற்பனையில் முதலிடம் பிடித்தது (54.89 கோடி ரூபாய்). அதேபோல் சென்னை இரண்டாம் இடத்தில் இருந்தது (52.28 கோடி ரூபாய்) என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ