கல்லூரி பேருந்தில் Rugged Girl-க்கும் ஆசிரியைக்கும் நடந்த மோதல்! வைரலாகும் வீடியோ!

தனியார் கல்லூரி பேருந்தில் மாணவியும் ஆசிரியையும் மாறி மாறி தாக்கும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Nov 26, 2022, 11:41 AM IST
  • பேருந்தில் சண்டையிட்டு கொண்ட ஆசிரியை மற்றும் மாணவி.
  • ஐடி கார்டை போட சொல்லி சண்டையிட்ட மாணவி.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
கல்லூரி பேருந்தில் Rugged Girl-க்கும் ஆசிரியைக்கும் நடந்த மோதல்! வைரலாகும் வீடியோ! title=

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரி பேருந்தில் மாணவிக்கும் ஆசிரியருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.  கல்லூரியில் இருந்து வழக்கம் போல் மாணவர்களும் ஆசிரியர்களும் பேருந்துக்குள் ஏறி செல்லும் பொழுது மாணவி அருகில் ஆசிரியை ஒருவர் அமர்ந்திருக்கிறார். அப்பொழுது அந்த மாணவி நீங்கள் யார் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த ஆசிரியை இந்த கல்லூரியின் ஆசிரியர் என தெரிவித்திருக்கிறார். ஆசிரியை என்றால் கழுத்தில் ஐடி கார்டு அணியும் படி மாணவி ஆசிரியரிடம் தெரிவித்திருக்கிறார். 

மேலும் படிக்க | சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் சண்டை: அங்க ஒரு ட்விஸ்ட், வைரல் வீடியோ 

நான் எதற்கு அணிய வேண்டும் என ஆசிரியை அந்த மாணவியிடம் கேட்டதற்கு, எங்களை மட்டும் அணிய சொல்கிறீர்கள் அல்லவா, நீங்கள் யார் என்று எங்களுக்கு எப்படி தெரியும் என  இரண்டு பேருக்கும் வாய் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்பொழுது வாடி போடி என இருவரும் பேசிக் கொள்ளவே அந்த ஆசிரியை மாணவியை கன்னத்தில் அறைந்து விடுகிறார் அந்த மாணவியும் பதிலுக்கு அடிக்க துணிகின்ற இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

 

இந்த விவகாரம் தொடர்பாக செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் எந்த விதமான புகார் அளிக்கப்படவில்லை, இருப்பினும் கல்லூரியின் நிர்வாகத்தில் தரப்பில் இரண்டு தரப்பின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மெதுவாக ஊர்ந்து போகும் 18 அடி மலைப்பாம்பு: நடுங்க வைக்கும் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News