‘ஒருங்கிணைப்பாளர்’ எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு ஓ.பி.எஸ் கடிதம்!

பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jul 14, 2022, 05:38 PM IST
  • எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வானார்
  • ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டது
  • கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்
‘ஒருங்கிணைப்பாளர்’ எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு ஓ.பி.எஸ் கடிதம்! title=

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்திருந்த நிலையில் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வானகரத்தில் நடைபெற்றது. 

அதில் பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வானார். அதேபோல ஓ.பன்னீர் செல்வம் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டதுடன் அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கி அறிவிக்கப்பட்டது. 

அத்துடன் அதிமுகவில் அவர் வகித்துவந்த பொருளாளர் பதவியும் பிடுங்கப்பட்டது. இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வத்திடமிருந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பொறுப்பையும் நீக்க அதிமுக முடிவு செய்துவருவதாகக் கூறப்படுகிறது. அந்தப் பொறுப்புக்கு நத்தம் விஸ்வநாதன் அல்லது திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால் ஓ.பன்னீர்செல்வமோ தன்னைக் கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது எனவும் அந்த அதிகாரம் அதிமுகவில் இல்லை எனவும் கூறிவருகிறார். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகக் கூறியுள்ள அவர், எடப்பாடி பழனிசாமியை கட்சியிலிருந்து தான் நீக்கியுள்ளதாகவும் கூறி அதிரடி காட்டிவருகிறார். கட்சியில் வெடித்துள்ள இந்த மோதலால் தொண்டர்கள் குழப்பத்தில் இருந்துவருகின்றனர்.

இதனிடையே, நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஜூலை 15 முதல் அடுத்த 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆனதையொட்டி அடுத்த 75 நாட்களுக்கு இந்த இலவச பூஸ்டர் டோஸ் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஆண்டவரின் அசாத்திய சம்பவம் ‘ஆளவந்தான்’ பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய 10 விஷயங்கள்!

இந்நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பைப் பாராட்டி பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.  அதில் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டே கடிதம் எழுதியுள்ளார் ஓ. பன்னீர்செல்வம். தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனை அவர் வெளியிட்டுள்ளார்.

 ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக இ.பி.எஸ் தரப்பு கூறிவரும் நிலையில் தன்னை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு ஓ.பி.எஸ் எழுதியுள்ள கடிதம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | இளையராஜா எம்.பி அறிவிப்புக்குப் பின் அவர் பற்றிய ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் பதிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News