தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 1937 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று மட்டும் 81 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்!

Last Updated : Apr 27, 2020, 07:06 PM IST
தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 1937 ஆக உயர்வு! title=

தமிழகத்தில் இன்று மட்டும் 81 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,937 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உள்ளது. 

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 33 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் ஆவர். இந்நிலையில், தமிழகத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1937 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று உயிரிழப்புகள் எதுவும் பதிவாக்காததால் மொத்தம் உயிரிழந்தவர்களின் ‌எண்ணிக்கை 24 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 7176 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, முழுவதும் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 1101 ஆக அதிகரித்துள்ளது.  அதில் அதிகபட்சமாக சென்னையில் 34, கோவையில் 26, சிவகங்கையில் 10, திருவாரூரில் 6 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழகத்தில் தற்போது, 809 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் உயிரிழப்பு விகிதம் 1.2 சதவீதமாகவும், குணமடைந்தவர்கள் விகிதம் 56.8 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. 

இன்று பாதிக்கபட்டவர்களில், அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 47 பேர் பதிவாகியுள்ளனர். மதுரையில் 4 பேருக்கும், விழுப்புரத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், இன்று பாதிக்கப்பட்ட மொத்த தொற்றும் சென்னை, மதுரை, விழுப்புரம் மாவட்டங்களில் மட்டுமே நிகழ்ந்துள்ளது. விழுப்புரத்தில் பாதிக்கப்பட்டவர் ஒரு வயது குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

District
Confirmed
 
Chennai
47
575
Coimbatore 141
Tiruppur 112
Dindigul 80
Madurai
4
79
Erode 70
Tirunelveli 65
Namakkal 59
Chengalpattu 55
Thiruvallur 54
Thanjavur 54
Viluppuram
1
52
Tiruchirappalli 51
Theni 44
Nagapattinam 44
Karur 41
Ranipet 38
Tenkasi 35
Virudhunagar 32
Salem 31
Thiruvarur 30
Thoothukkudi 27
Cuddalore 26
Vellore 23
Tirupathur 18
Kancheepuram 18
Kanniyakumari 16
Ramanathapuram 15
Sivaganga 12
Tiruvannamalai 11
The Nilgiris 9
Perambalur 7
Kallakurichi 6
Ariyalur 5
Pudukkottai 1
Dharmapuri 1

தமிழகத்தில், தற்போது 29,797 பேர் வீட்டுக்கண்காணிப்பிலும், 36 பேர் அரசுக்கண்காணிப்பிலும் உள்ளனர்" என அந்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.  

Trending News