மீன் பிடிக்க, மீன் பிடி கப்பலில் சென்ற மீனவர்கள், நடுக்கடலில் மாட்டிக் கொண்டனர். அவர்களை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர். நடுக்கடலில் மாட்டிக் கொண்ட 9 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
புதுச்சேரி கடற்கரையில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் சிக்கியிருந்த ஒன்பது மீனவர்களை இந்திய கடலோர காவல்படை மீட்டது. மீனவர்களின் கப்பலின் இயந்திரம் செயலிழந்ததால் அவர்கள் நடுக்கடலில் மாட்டிக் கொண்டனர்.
சென்னையில் (Chennai) பதிவுசெய்த கப்பலான ‘ருக்மினி’ என்ற கப்பலில் இருந்து அழைப்பு வந்தது. மீனவர்கள் தாங்கள் நடுக்கடலில் மாட்டிக் கொண்ட விபரத்தை தெரிவித்தனர். ரோந்து பணியை மேற்கொண்ட டோர்னியர் ஏன்னும் விமானம் தகவல் கிடைத்ததும் உடனடியாக செயலில் இறங்கியது.
மீனவர்களிடம் இருந்து வந்த தகவலை அடுத்து, கப்பலை கொண்டு வர உதவி வழங்கவும் மீனவர்களை மீட்கவும் ஐ.சி.ஜி.எஸ் அனாக்கிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. படகு உரிமையாளருக்கும் நிலைமை குறித்து தெரிவிக்கப்பட்டது.
வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில், மீன்பிடி கப்பலும் கடலூரிலிருந்து புதுச்சேரி மற்றும் சென்னைக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது. மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இதற்கிடையில், தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்படும் விவகாரத்தை இந்தியா இலங்கையிடம் தீவிரமாக முன்னெடுத்து வைத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை மிகத் தெளிவாக இலங்கையிடம் எடுத்துரைத்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புதன்கிழமை மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இலங்கை கடற்படையால் கடலில் நடுப்பகுதியில் மீன்பிடிக்கும்போது நான்கு மீனவர்கள் (Fishermen) கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பிரச்சினையை தமிழ் கட்சிகள் எழுப்பியதை அடுத்து இந்த அறிக்கை வந்துள்ளது.
ALSO READ | விபத்தில் சிதைந்த முகம் கைகள்... முகம், கை மாற்று சிகிச்சை அளித்தது மறுவாழ்வு..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR