கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது காட்டு யானைகள் கூட்டமாகவும் தனித்தனியாகவும் தொழிலாளர்கள் பணிசெய்யும் தேயிலைத் தோட்டம் மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே உலாவருவது வாடிக்கையாகிவிட்டது.
இந்த நிலையில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் சில சமயங்களில் யானைகள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் வால்பாறை அடுத்துள்ள முத்துமுடி எஸ்டேட் பகுதியில் இன்று வனப்பகுதிக்குள் இருந்து திடீரென 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தன.
யானைகள் கூட்டம் கூட்டமாக தேயிலை தோட்டத்திற்குள் வருவதைப் பார்த்த தோட்டத் தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் தேயிலை பறிக்கும் தொழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. யானைகள் சுற்றித் திரிவது தொடர்பாக உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்த வனத் துறையினர் விரைந்து வந்து யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். வால்பாறையில் முதல் முறையாக 40க்கும் மேற்பட்ட யானைகள் ஒரே இடத்தில் முகாமிட்டு இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளது.
சுற்றித் திரியும் யானைகள். தற்போது இருக்கும் பகுதியில் இருந்து அடுத்த பகுதிக்கு செல்லும் போது குடியிருப்பு பகுதிகள் நுழையாதவாறு வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாலை வேளையில் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் வீட்டின் முன்புறம் விளக்குகளை பிரகாசமாக எரிய விட வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
40க்கும் மேற்பட்ட யானைகள் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் சேதங்களை ஏற்படுத்தியுள்ள காட்டு யானைகள், தற்போது பெருமளவில் ஒன்றுகூடி இருப்பதால் அப்பகுதி பொது மக்களின் கவலையும் அச்சமும் அதிகரித்துள்ளது.
ALSO READ | தவறான எண்ணத்தில் நிலைத்திருப்பதை விட கருத்தை மாற்றுவது நல்லது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR