மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சிறப்பு அழைப்பாளராக ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் அவரது மகள் ரோஷினி நாடார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " சென்னை தலைநகர் என்றால் மதுரை கலை நகர். இந்த ஸ்டாலின் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வான் என்பதற்கு உதாரணம் தான் சென்னையில் பன்நோக்கு மருத்துவமனையும், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம். மாணவர்கள் யாரைப் பார்த்தாலும் நல்லா படிங்க என்றுதான் சொல்வேன். எத்தனை தடைகள் வந்தாலும் படிப்பை மட்டும் நீங்கள் யாரும் கைவிட்டுவிடாதீர்கள். படிப்பு மட்டும்தான் யாரும் திருட முடியாத நிலையான சொத்து.
மேலும் படிக்க | இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்... ரூ.1000 வாங்க டோக்கன் - இந்த தேதி முதல் விநியோகம்!
எத்தனை தடைகள் வந்தாலும் படிப்பை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள். நூலகத்தினால் அறிவுத்தீ தமிழ்நாட்டில் பரவப்போகிறது. சங்கம் வளர்த்த மதுரையில் நூலகம் அமைக்காமல் வேறு எங்கு அமைப்பது?. கல்வியும், சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் எண்ணம். இனத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது கல்வி.
ஷிவ் நாடாரை சிறப்பு அழைப்பாளராக இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தது ஏன் தெரியுமா?. அவர் பொதுவாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார். ஆனால் மாணவ மாணவிகளான நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக தான் அழைத்து வந்தோம். இந்தியாவில் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார், அதிக நன்கொடை அளிப்பவர்களில் ஒருவர். தனது தாய் சொன்ன ஒரே காரணத்திற்காக இதனை செய்து வருகிறார். மாநகராட்சி பள்ளிகளில் படித்து இவ்வளவு பெரிய உயரத்துக்கு உயர்ந்திருக்கிறார் என்பதை அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் நினைவில் கொள்ள வேண்டும்" என்றார். கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு மாணவர்கள் அறிவுத் தேடலோடு வந்து பயன்பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும் படிக்க | பொங்கலுக்கு வேட்டி, சேலை: நிதி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ