சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு, மு.க.ஸ்டாலின் முதன் முறையாக தலைநகர் டெல்லிக்கு செல்லவுள்ளார். பிரதமரை சந்திக்கவுள்ள முதல்வர், பல முக்கிய விஷயங்களைப் பற்றி அவருடன் கலந்தாலோசிக்க உள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாளை மறுநாள், அதாவது ஜூன் 17 ஆம் தேதி, பிரதமர் மோடியை (PM Modi) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் சந்திக்கவுள்ளார். முன்னதாக, முதல்வர், பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். பிரதமர் மற்றும் தமிழக முதல்வரின் சந்திபுக்கான நேரம் இன்று உறுதியாகியுள்ளது.
தமிழக முதல்வர் பிரதமரை சந்திக்கும் போது பல முக்கிய பிரச்சனைகள் பற்றி பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொரோன தடுப்பூசிகளுக்கான விநியோகம், கருப்புபூஞ்சைக்கான மருந்துகள், நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான கோரிக்கை மனுக்களை முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ALSO READ: TN Lockdown: மாவட்ட ஆட்சியர்களுடன், முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, ஜுன் 18 ஆம் தேதி, மு.க. ஸ்டாலின் (MK Stalin) சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்கிறார். இந்த சந்திப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில், ஏ.கே.எஸ் விஜயன் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நேற்று நியமனம் செய்யப்பட்டார். இன்று மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஏ.கே.எஸ் விஜயன் வாழ்த்துப் பெற்றார்.
முதல்வர் ஸ்டாலின் 17 ஆம் தேதி காலை தனி விமானம் மூலம் டெல்லி (Delhi) செல்கிறார். காலை 10:30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திக்க முதல்வர் ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக டெல்லிக்கு பயணம் செய்கிறார். பிரதமர் மோடியுடனான முதல்வர் ஸ்டாலினின் முதல் சந்திப்பு அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் அதிகப்படியான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி மற்றும் கொள்கை ரீதியாக பல வேறுபாடுகள் உள்ளபோதும், இந்த இரு தலைவர்களுமே அரசியல் பக்குவம் மிகுந்தவர்கள் என்பதால், இந்த சந்திப்பு தமிழகத்தில் நல்ல விளைவுகளை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ALSO READ: Tamil Nadu: சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR