காஞ்சிபுரம் உலக பிரசித்திபெற்ற காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் இன்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சாமி தரிசனம் மேற்கொண்டார். இந்நிலையில் இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, ஒரே நாடு ஒரே தேர்தலை மு.க.ஸ்டாலின் எதிர்ப்பது குறித்து கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மு.க.ஸ்டாலினின் தந்தையான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களே நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தில் ஆதரித்து கூறியிருக்கிறார், ஆகையால் அப்பா பேச்சை கேட்காத அனில் பிள்ளையாக தான் தற்போதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என விமர்சித்தார். மேலும் சிஎஜி அறிக்கையின் படி ரூ.1185 கோடியில், இந்துக்கள் கொடுத்த நன்கொடையில் தான் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும்போது செய்யக்கூடாத தவறுகள்..!
நன்கொடையை வைத்து கும்பாபிஷேகம் நடத்தி விட்டு பிறகு ஏன் முதலமைச்சர் வழிகாட்டுதலுடன் நடைபெறுவதாக அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார் என தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவரே தற்போது வரை மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறவில்லை என சட்டமன்றத்தில் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்த அரசாங்கம் சென்னையை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளது, இது தவறு என்று ஒரு மாதத்திற்கு முன்பே அரசாங்கத்திற்கு நான் எச்சரிக்கை விடுத்தேன், ஆகையால் உங்கள் சிந்தனையை சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களை கருத்தில் கொண்டு கண்காணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளேன் எச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் நீண்ட நாள் கனவு திட்டமாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் உள்ளது. இதன்படி, 543 மக்களவை தொகுதிகள், 4120 சட்டப்பேரவை தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் தற்போதைய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் கொடுக்கப்பட்டது.
மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல், 100 நாட்களில் உள்ளாட்சி தேர்தல், ஒரே வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும் போன்ற கருத்துக்கள் இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. தற்போது அமைச்சரவையும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணையும் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் அமல்படுத்தப்பட்டால் 2029-ம் ஆண்டு இந்திய முழுவதும் தேர்தல் நடைபெறும். இதற்கு முன்பு இந்தியா சுதந்திரம் அடைந்த சமயத்தில் அதாவது 1951-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர் இந்த நடைமுறை கைவிடப்பட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ