திண்டுக்கல் மாவட்ட செய்திகள்: தமிழக முதல்வரின் துரித நடவடிக்கையின் காரணமாக 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7000 படுக்க வசதிகள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது என திண்டுக்கல்லில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் கொரோனா வைரல் தொற்று குறித்தும் எச்சரித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியது குறித்து பார்ப்போம்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ119.6 கோடி செலவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடத்தை இன்று 04.04.23 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார். விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரதமர் அவர்களால் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட்டது. திருவள்ளுர் கிருஷ்ணகிரி அரியலூர் விருதுநகர் கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் 500 மற்றும் 700 படுக்க வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது திண்டுக்கல்லில் 500 படுக்கையில் கொண்ட மருத்துவ வசதி கொண்டு வரப்பட்டது. ஊட்டி திருப்பூர் நாமக்கல் நாகப்பட்டினம் ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் படுக்கை வசதிகளை கொண்ட கட்டிடங்களை விரைந்து கட்டி பயன்பாட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: தமிழ் திரையரங்குகளுக்கு முக்கிய கட்டுப்பாடு..காரணம் இதுதான்
இன்னும் 25 நாட்களில் திருப்பூர் மற்றும் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் படுக்கை வசதிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். மற்ற மூன்று மாவட்டங்களில் மூன்று மாதத்தில் பயன்பாட்டு கொண்டு வரப்படும். தமிழ்நாட்டில் 7000 படுக்கை வசதிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துரித நடவடிக்கையால் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 26 இடங்களில் ரூ.103 கோடி மதிப்பீட்டில் மருத்துவ துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவர் மற்றும் செவிலியர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டிலேயே அதிகமான மருத்துவ கட்டமைப்பு வசதிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் செய்யப்பட்டு வருகிறது. மருந்தகங்களில் மருத்துவர்களின் சீட்டு இல்லாமல் மருந்துகளை வழங்கக் கூடாது அதையும் மீறி வழங்கினால் அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள 11333 அரசு மருத்துவ நிர்வாகங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டுமென கடந்த 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
ஒமிக்கிரானின் உருமாற்ற வைரஸ்கள் தற்போது கூடுதலாக ஆக தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3038 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 186 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் திண்டுக்கல்லில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களான சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய விமான நிலையங்களில் ரேண்டமாக இரண்டு சதவீதம் பேருக்கு ஆர்.டி.பி.சி பரிசேதனை செய்யப்பட்டு வந்தது. இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருவருக்குத்தான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மீண்டும் பீதியை கிளப்பும் கொரோனா தொற்று: பழைய நிலை திரும்புமா?
ஆனால் தற்போது துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு பத்து பதினைந்து பேர் என்ற அளவில் பாதிப்பு கூடிய உள்ளது. ஒமிக்கிரான் வைரஸ் உருமாற்றம் பெரும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை.
பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனை பெற்று 6 நாட்கள் தனிமையில் இருந்தால் குணமாகிவிடும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. பெரிய அளவில் பதட்டமோ அச்சமோ கொள்ள தேவையில்லை. பாதுகாப்பாக இருந்தாலே குணப்படுத்தி விடலாம்.
1021 மருத்துவர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு ஏப்ரல் 25, 26ம் தேதிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. 1021 மருத்துவர் பணியிடங்களுக்கு 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிதி அறிக்கையில் மருத்துவத்துறையில் எவ்வளவு காலி பணியிடங்கள் உள்ளதோ அதனை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் 90 சதவீதம் பேருக்கு எதிர்ப்பு சக்திகள் அதிக சிறப்பாக உள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் இறப்புகள் இல்லாமல் உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! இந்த அறிகுறிகள் இருக்கிறதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ