ராம்நாட்டில் ஆண்கள் மட்டும் வழிபடும் விநோத திருவிழா!

ராமநாதபுரத்தில் ஆண்கள் மட்டும் வழிபடும் பெண் தெய்வம் திருவிழா நடைபெற்று வருகிறது.  

Last Updated : Oct 3, 2021, 07:19 PM IST
ராம்நாட்டில் ஆண்கள் மட்டும் வழிபடும் விநோத திருவிழா! title=

இராமநாதபுரம் :  இராமநாதபுர மாவட்டம் கமுதி அருகே உள்ளது முதல்நாடு, கலைக்குளம் கிராமங்களுக்கு இடையில் உள்ள கண்மாய் கரையில் உள்ளது எல்லைப்பிடாரி அம்மன் பீடம்.  இந்த கோவிலில் வருடத்திற்கு ஒரு முறை புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டும் வழிபடும் விநோத திருவிழா நடைபெறுகிறது.இதன் பின்னணியில் கதை ஒன்று காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு, பெண் ஒருவர் 5 சகோதரர்கள் உடன் பிறந்துள்ளார். சகோதரர்கள் அனைவருக்கும் திருமணமாகி, அவர்களது வீட்டிற்கு அண்ணிகள் வந்துள்ளனர். அவர்கள் அப்பெண்ணை மிகவும் கொடுமைப்படுத்தி உள்ளனர்.  இதனால் மனமுடைந்த அப்பெண், வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். தற்போது கோயில் அமைந்திருக்கும் இடத்திற்கு அருகே வந்தவுடன் மாயமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து முதல்நாடு கிராம மக்களின் கனவில் அப்பெண் வந்துள்ளார்.

ram

அப்போது, தான் மாயமான இடத்தில் கோயில் எழுப்பி தன்னை தெய்வமாக வழிபட வேண்டும். அங்கு ஆண்கள் மட்டும் ஆண்டிற்கு ஒருமுறை கிடாய் வெட்டி வழிபட வேண்டும். இந்த விழாவில் பெண்கள் யாரும் வரக் கூடாது என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது.  அப்போது, தான் மாயமான இடத்தில் கோயில் எழுப்பி தன்னை தெய்வமாக வழிபட வேண்டும். அங்கு ஆண்கள் மட்டும் ஆண்டிற்கு ஒருமுறை கிடாய் வெட்டி வழிபட வேண்டும். இந்த விழாவில் பெண்கள் யாரும் வரக் கூடாது என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது.

ram

இதன்படி நடப்பாண்டும் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து 3,000க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.  இந்த திருவிழாவின் போது அந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள் அனைவரும் ஒன்று கூடி எல்லைப்பிடாரி அம்மனுக்கு அங்குள்ள மணல்களால் பீடம் அமைத்து அலங்காரம் செய்து, கைக்குத்தல் பச்சரிசி சாதம் செய்து, 50 செம்மறி கிடாய்கள் பலியிட்டு பலியிட்ட கிடாய் களின் தலைகளை அந்த பீடத்திற்கு எதிரில் வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

பூஜை முடிந்த பின்னர் சாத உருண்டைகளை பனை ஓலையால் பின்னப்பட்ட மட்டையில் வைத்து, அதனுடன் பலியிட்ட கிடாய் கறிகளை விருந்தாக வைத்து வருகை தந்த அனைத்து கிராம மக்களையும் வரிசையில் அமர வைத்து பரிமாறப்பட்டது.  அனைவரும் சாப்பிட்ட பின் மீதமுள்ள சாப்பாடு வீட்டிற்கு கொண்டு செல்லக்கூடாது என்பதால் சாப்பாடுகள் அனைத்தும் அங்கேயே புதைக்கப்பட்டது. ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த திருவிழாவிற்கு கமுதி மற்றும் முதல்நாடு, முஸ்டக்குறிச்சி உள்ளிட்ட 50 க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் இருந்தும், வெளி ஊர்களில் இருந்தும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு எல்லைப்பிடாரி அம்மனை வழிபட்டனர்.

ALSO READ முதுமலை ஆட்கொல்லி புலி மாயம்; மக்கள் மத்தியில் பதற்றம்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News